அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவை


வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக கைத்தெழிற்சாலைகள் அழிவடைந்துள்ளன.

90000 வரையிலான இளம் கணவரை இழந்த பெண்கள் பிள்ளைகளுடன் அல்லற்படுகின்றனர். இந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாற்றமடைந்துள்ளது.

புதிய ஆட்சியாளர்களுக்க இந்தப் பகுதிகளை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

இளைஞர் யுவதிகளுக்கு கிரமமான முறையில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாவிட்டால் அவர்களது அபிலாசைகள் சீர்குலைந்துவிடும். வடக்கு கிழக்கு பட்டதாரிகள் இன்றும் (நேற்று) போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

எமது பகுதிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள் என மாவை சேனாதிராஜா நாடாளுமன்றில் கோரியுள்ளார்.

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்த யோசனை தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவை Reviewed by NEWMANNAR on September 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.