நாகர்கோவில் பாடசாலை படுகொலை நினைவுத் தூபியை திறந்து வைத்த முதலமைச்சர்-Photos
யாழ்/ வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது 1995ம் ஆண்டு ஸ்ரீலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 மாணவர்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
21 மாணவச் செல்வங்களின் உருவப் படங்களைத் தாங்கிய நினைவுத்தூபி ஒன்று நிறுவப்பட்டு, மாண்புமிகு நீதியரசர் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தூபியைத் திறந்துவைத்துள்ளார்.
யா/நாகர்கோவில் மகா வித்தியாலய முன்றலில் நிறுவப்பட்ட இத் தூபியானது இன்று பிற்பகல் 3;00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது.
இவ் இருபதாவது ஆண்டு நிறைவுநாளில் நாகர்கோவில் மகா வித்தியாலய முன்றலில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டு, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலியான மாணவர்களின் உறவினர்கள், ஊர்மக்கள் என அனைவரும் அவ் மாணவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தினர்.
வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் உரையாற்றி மாணவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டார்.
மாணவ மணிகளை நினைவேந்தி அகல் விளக்கேற்றி, நினைவுப் பதிவேடான நெஞ்சைப் பிசையும் நினைவுகள் எனும் புத்தகமும் வெளீயிட்டு பலியான மாணவர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட நினைவு நாட்காட்டியும் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந் நினைவு கூரல் நிகழ்வுக்கு 1995ம் ஆண்டு பாடசாலை அதிபராக இருந்த சி.மகேந்திரம் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சி செய்த காலப்பகுதியிலேயே 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் நாள் நகர்கோவில் மகா வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் பாடசாலை படுகொலை நினைவுத் தூபியை திறந்து வைத்த முதலமைச்சர்-Photos
Reviewed by NEWMANNAR
on
September 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 23, 2015
Rating:




No comments:
Post a Comment