அண்மைய செய்திகள்

recent
-

வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க காணாமல் போனவர்களின் மனைவிகளிடம் மரணச்சான்றுதல் கேட்கும் வங்கி நிர்வாகம்.a

மன்னாரில் உள்ள சில வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்கச் செல்லும் கணவனை பறிகொடுத்த குடும்பப்பெண்களிடன் வங்கி முகாமைத்துவம் கணவனின் மரணச்சான்றுதலை கேட்பதாக பாதீக்கப்பட்ட பெண்கள் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும்,மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தருமான அந்தோனி சகாயம் தெரிவித்தார்.

இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் யுத்தத்திற்கு முன்பும்,யுத்தத்திற்கு பின்னரும் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.பலர் காணாமல் போயுள்ளனர்.

இவர்களில் பலர் குடும்பத்தலைவர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையில் குறித்த குடும்பத்தலைவர்கள் கடத்தப்படுவதற்கு அல்லது காணாமல் போவதற்கு முன்னர் தமது  குடும்ப தேவைகளுக்காக தனது மனைவி அல்லது பிள்ளளைகளின் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

-இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக பலர் கடத்தப்பட்டனர்.பலர் காணாமல் போயுள்ளனர்.இவர்களின் வங்கிகளில் நகைகளை அடகு வைத்த பல குடும்பத்தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.

-இவர்களில் பலர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.தமது கணவர் அடகு வைத்த நகைகளை மீட்கும் பணியில் காணாமல் போன குடும்பத்தலைவர்களின் மனைவிகள் ஈடுபட்டு வருகின்ற போதும் மன்னாரில் உள்ள சில வங்கிகளின் முhமைத்துவம் காணாமல் போன தமது கணவனின் மரணச்சான்றுதலை கேட்கின்றனர்.

-இது அவர்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்துகின்றது.
குறித்த நகைகளை மீட்பதற்கு குறித்த பெண்கள் கட்டம் கட்டமாக வங்கிக்கு பணத்தை செலுத்தி இருதியாக நகைகளை கேட்டால் காணாமல் போ தமது கணவருக்கான மரணச்சான்றுதலை கேட்கின்றனர்.

இது தொடர்பாக பாதீக்கப்பட்ட பல பெண்கள் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும்,மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தருமான அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்தார்.

வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க காணாமல் போனவர்களின் மனைவிகளிடம் மரணச்சான்றுதல் கேட்கும் வங்கி நிர்வாகம்.a Reviewed by Admin on September 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.