அண்மைய செய்திகள்

recent
-

கண்டி எசல பெரஹரவுக்கு சென்ற ஜனாதிபதி தலதாமாளிகையில் வழிபாடு...


எசல பெரஹரவை முன்னிட்டு கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

மல்வத்து பீட மகாநாயக்கரைச் சந்தித்த ஜனாதிபதி அவரின் சுகநலன்களையும் கேட்டறிந்தார்.

இம்முறையும் பெரஹராவை சிறப்பாக நடத்த கிடைத்தமை தொடர்பாக தேரர் ஜனாதிபதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அஸ்கிரிய மகாநாயக்கரையும் ஜனாதிபதி சந்தித்தார்.

அவருடன் ஜனாதிபதி உரை யாடினார். புராதன காலம் தொட்டு நடைபெறும் இந்த பெரஹராவின் மகத்துவம் பற்றிக் குறிப்பிட்ட தேரர், எதிர்காலத் தலை முறைக்கும் இதனைப் பாதுகாப்பது அவசியம் என்றும் கூறினார்.

அன்று விவசாயத் துறையில் நாட்டைச் செழிப்புறச் செய்யவும் இப்பெரஹர ஆசீர்வாதம் வழங்கியது.

நாட்டை விவசாய நாடாகக் கட்டி யெழுப்ப ரஜரட்டை புத்திரரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தலதா மாளிகையின் ஆசீர்வாதம் உரித்தாவதாகவும் தேரர் கூறினார்.

கண்டி எசல பெரஹரவுக்கு சென்ற ஜனாதிபதி தலதாமாளிகையில் வழிபாடு... Reviewed by Author on August 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.