அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை-அதிக மாணவர்களை ஏற்றுவதாகவும் முறைப்பாடு.

மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபட்டு வரும் வாகனங்கள் தொடர்பில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

-மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை முச்சக்கர வண்டி மற்றும் ஹயஸ் வாகனங்கள் மூலம் மாதாந்த தவணைக்கட்டண அடிப்படையில் மாணவர்களை ஏற்றி இறக்கும் சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.

-எனினும் சில முச்சக்கர வண்டி சாரதிகள் தமது முச்சக்கர வண்டியில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி சேவையில் ஈடுபடுவதாகவும் அதி வேகத்தில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-முச்சக்கர வண்டியில் 4 முதல் 6 வரையிலான சிறுவர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே சிறவர்களையும்,மாணவர்களையும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,குறிப்பாக பாடசாலை சேவையில் ஈடுபட்டு வரும் முச்சக்கச வண்டி மற்றும் ஹயஸ் வாகன உரிமையாளர்களுக்கு இச் சேவை தெடர்பில் விழிர்ப்பணர்வுகளை ஏற்படுத்த மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.


(மன்னார் நிருபர்)

(24-10-2015)


மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை-அதிக மாணவர்களை ஏற்றுவதாகவும் முறைப்பாடு. Reviewed by NEWMANNAR on October 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.