தலைமன்னார் பியர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 20 போத்தல் கசிப்பு மீட்பு-நீர் கொழும்பைச் சேர்ந்த ஒருவர் கைது.-Photos
தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றில் பதுக்கி வைத்திருந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 20 போத்தில் கசிப்பை மீட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் நீர் கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவரையும் இன்று (24) சனிக்கிழமை மதியம் கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக தலைமன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர லக்கம் தலைமையில் சென்ற சி.பிலிப்ஸ்,சந்தன பிரிமுத்து குமார சேகர ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தலைமன்னார் பியர் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீன் வாடி ஒன்றில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 போத்தல்களில் அடைக்கப்பட்ட சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட கசிப்பு போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அத்தோடு சந்தேகத்தின் பெயரில் குறித்த வாடியில் இருந்த நீர் கொழும்பை வதிவிடமாக கொண்ட மீனவர் ஒருவரையும் தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 20 போத்தல் கசிப்பு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடம் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் பியர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 20 போத்தல் கசிப்பு மீட்பு-நீர் கொழும்பைச் சேர்ந்த ஒருவர் கைது.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 24, 2015
Rating:

No comments:
Post a Comment