சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இன்று 01-10-2015 ...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இன்று 01-10-2015 காலையில் புனித செபஸ்தியார் பேராலயத்தின் புனித அருளப்பர் அரங்கில் மன்னார் மீனவர்கள் சம்மேளத்தினாலும் பெண்கள் அமைப்பினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி….
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இன்று 01-10-2015 காலையில் புனித செபஸ்தியார் பேராலயத்தின் புனித அருளப்பர் அரங்கில் மன்னார் மீனவர்கள் சம்மேளத்தினாலும் பெண்கள் அமைப்பினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்படுகின்ற அநீதிகள் கொடுமைகள் பாலியல் துஷ்பிரயோகங்கள் கண்டித்தும் மாணவி வித்தியா மற்றும் சேயா கொலைக்கு எதிராகவும் இனியும் இப்படியான இழிவான செயல்களில் ஈடுபடும் கயவர்களை காமுகர்களை தகுந்த தண்டணையோடு தண்டிக்கவும் சட்டம் ஒழுங்கான முறையில் செயற்பட வேண்டும்
அத்தோடு இனிவருங்காலத்தில் எமது இளம் சிறார்களையும் பெண்களையும் காக்கும் வண்ணம் உறுதியானதும் ஒழுங்கானதுமான சட்டத்தினை மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பிறப்பிக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் மகஜரினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையணித்தனர்…
இந்நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களும் வட மாகாண சபை உறுப்பினர் சிறாய்வா அவர்களும் த.தே.கூ. இளைஞர் அணி செயலாளர் சிவகரன் அவர்களும் பேராலயபபங்குத்தந்தையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியதோடு உரிமைக்காககுரல் கொடுத்தனர்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இன்று 01-10-2015 ...
Reviewed by Author
on
October 01, 2015
Rating:

No comments:
Post a Comment