அண்மைய செய்திகள்

recent
-

சோரம் போகாத வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அகவை 76இல் இன்று


வடக்கு முதல்வர் அரசியலுக்கு வருகையில் சில விமர்சனங்களும் விருப்பமின்மையும் அரசியல் தலைவர்களிடம் இருந்தமை யாவரும் அறிந்தவை ஆனால் இவற்றுக்கு மக்கள் விதிவிலக்கு.
அரசியலில் கால் பதித்த நாளில் இருந்து பொது வாழ்க்கை ஆன்மீகம் என வாழ்ந்தவரிடத்தில் இவ்வளவு ஆழமான அரசியல் இருந்ததா எனும் வினா சகலரிடமும் இன்று வரை உள்ளது.

காரணம் ஆழமான அரசியல் அதிலும் உணர்சிவசப்படாது கருத்து விமர்சனங்களை பெருமனதுடன் ஏற்கும் மனநிலை மக்கள் பற்றிய ஆழமான சிந்தனை இப்படியாக கொழும்பில் வாழ்ந்த விக்னேஸ்வரனிற்கு நல்லூரடியைத் தவிர வேறு எதுவும் தெரியாது எனக் கூறியவர்கள் மத்தியில் வடக்கின் முதல்வர் பதவியை ஏற்றதும் கொழும்பிற்கு சென்றதை எண்ணிக்கையில் கூறலாம் வட-கிழக்கில் இருந்த பலர் கொழும்பில் வசிப்பதை விட்டு வட-கிழக்கிற்கு விடுமுறைக்கு வருவது போல இருப்பதுமே வேடிக்கை.

முன்னாள் நீதியரசராக இருந்து அரசியலில் கால் பதித்ததால் சிலவேளை இலங்கை அரசியலை அரவணைத்து போகும் நிலை இருக்கலாம் எனக் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழமைக்கு மாறாக இணக்க அரசியலும் அல்ல சோரம் போகும் மனமும் அற்றவராக உரிமையின் குரலாக மட்டும் நீதியின் அரசனாக திகழ்வது தமிழர்கள் பலருக்கு அதிசயம். காரணம் இவரை இப்படி யாரும் எதிர்பார்க்கவில்லை.

தனது புத்திரர்கள் சிங்கள பெண்களை மணம் முடித்து முழுமையான சிங்கள பாரம்பரியம் இருந்தாலும் குடும்பத்தை அரசியலில் நுழைக்காமல் தான் தமிழர்களின் காவலன் அதனை மீற முடியாது எனும் மனநிலையில் இருப்பது யாரும் எதிர் பாத்திராத மனநிலை.

பிரதமர் ரணிலுடன் வடக்கு முதல்வருக்கு முறுகல் நிலை ஏற்பட்ட போது, முதல்வரின் மகன் வடக்கு முதல்வருடன் ஏன் அப்பா இந் நிலை, சற்று அரவணைத்து போகலாம் தானே எனக் கூற அதனை கேட்டு சற்று லேசாக சிரித்து விட்டு, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் என்னிடம், இவ் இடத்தில் யார் முக்கியம் என சாதாரணமாக கூறிவிட்டாராம்�..

இப்படி குடும்பத்தின் கருத்துக்களையே நிராகரித்த ஒரு மகான் எனக் கூறலாம். வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பல வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் எல்லாம் இலங்கை சென்றால் வடக்கு விரைந்து முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து தமிழர் நிலமைகள் பற்றி ஆராய்வது அவருக்கு கிடைத்த இராஜதந்திர அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

இப்படியான ஒரு நிலை விடுதலைப்புலிகளின் காலத்தில் கொழும்பு வரும் சகல இராஜதந்திரிகளும் வன்னி சென்று விடுதலைப் புலிகளை சந்திப்பதை ஒப்பிடலாம். கூட்டமைப்பை சந்திக்கின்றனர் தானே என சிலர் கூறினாலும் அது புலிகளின் காலத்திலும் நிகழ்ந்தது இன்றும் நிகழ்கிறது அதனால் அது வழமையான நிகழ்ச்சி நிரல். எதையும் தெளிவாகவும் துணிவாகவும் கூறும் ஆளுமை தமிழரை வழிநடத்திய தலைவர்களுள் தந்தை செல்வா புலிகளின் தலைவர் பிரபாகரன் பட்டடியலில் மிக எளிமையாக இடம் பிடித்தார் விக்னேஸ்வரன் இதற்கு காரணம் அவரிடம் இருந்த விசித்திர ஆளுமை மட்டுமல்ல உண்மைத் தன்மையான கருத்துக்கள் எனலாம்.

2009க்கு பிற்பட்ட இன்றைய நாள் வரையான காலங்களில் தமிழர் எம்மை நாம் எத்தனை முறை கேள்வி கேட்டிருக்கிறோம் என்றால் பலரும் ஆம் என்று பதில் சொல்வோம் ஆனால் விடை தேட முனைந்திருக்கிறோமா என்றால் சொந்த விடயம் தவிர்ந்த பொது விடயங்களில் விடை தேடி இருக்கிறோமா என்றால் பதில் மௌனம் இக் கூற்று அரசியல் தலைவர்களுக்கும் விதி விலக்கல்ல�..

ஆனால் இவ்விடத்தில் விக்னேஸ்வரன் எனும் நாமம் சற்று வித்தியாசமான வகையில் உருவகம் பெறுகிறது அதாவது 2009 வரை அரசியல் பேசாது மௌனமான பாதையில் பயணித்து வாழ்வின் கடைசி காலங்களில் படித்த மனிதராகவே வாழ்ந்து விடுவாரா என்கிற தோற்றம் பலரிடம் இருந்தது. ஆனாலும் இறந்த மாவீரர்கள் மற்றும் பொது மக்களின் குருதியும் ஏக்கமும் விக்னேஸ்வரன் எனும் மனிதரை பல மனிதர்கள் மூலமாக வெளிப்படுத்துகிறது.

வெளிப்பாட்டின் பின்னர் அதீத எதிர்பார்ப்புக்கள் பலரிடம் இருக்கவில்லை நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஆனாலும் தன்னை ஆரம்பத்தில் மிக நிதானமாக நகர்த்தி இக்கட்டான நிலையில் தமிழ் இனம் தவிக்கின்ற போது ஒட்டு மொத்த தமிழனுக்கும் ஒரு பிதா மகனாக வலம் வரும் இவர் சொல் வீரன் மட்டுமல்ல செயலிலும் தமிழ் மக்களின் வலிகளுக்கு சிறந்த மனிதராக திகழ்வது முள்ளிவாய்க்காலில் பட்ட துயரிற்கு ஓரளவு மன நிம்மதி என சாதாரண மக்கள் கூறுவதைக் கேட்கையில் இதுவா பழைய நீதியரசர் என எண்ணத் தோன்றுகிறது.

தமிழரின் அரசியல் எதிர்காலம் எனப் பார்த்தால் அது நிதர்சனமான காலம் மறைந்து கானல்நீராகத் தென்படும் அளவிற்கு தமிழர் அரசியல் நிலை.அகவை 76 கால் பதிக்கும் வடக்கு முதல்வரிடம் பல பெறுப்புக்கள் உள்ளது எனலாம் அவரின் அவையடக்கம் புரிகிறது அதனால் தமிழ் இனத்திற்கு அழிவு வந்தால் அந்த குறையிலும் நீதியரசரும் உடன்பட்டு விடுவார் அல்லவா�..

வேறு ஒன்றும் அல்ல வடக்கில் குறிப்பாக யாழ் நகரில் இருந்து மிக ஆளுமையான தெளிவான கருத்துக்களை கூறுவது தமிழ் இனத்திற்கு பாதுகாப்பு. இதனையும் கடந்து கட்சி அரசியல் என்று ஒன்று உண்டல்லவா அதில் இன்று நீதியரசர் கூறும் கருத்து தமிழரின் நடைமுறை அரசியலுக்கு பலமானாலும் எதிர்கால அரசியலை பலமாக பற்றிப் பிடிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தமிழ் இனம் அந்த தமிழ் இனம் மேற் குறிப்பிட்டது போன்று தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர்களாக தந்தை செல்வா புலிகளின் தலைவர் பிரபாகரனை பார்கிறது இன்றுவரை அந்த இடத்தில் நீதியரசர் விரும்பாமலே மக்கள் அந்த மகுடத்தை அணிந்து விட்டனர் நீதியரர் மீது இதை நீதியரசர் ஏற்காவிட்டாலும் தன் காலத்தில் தமிழ் இனத்திற்கு ஒரு தந்தையாக தாயாக இருந்து தன் காலத்தில் முடியுமான வரை தமிழ் இனம் உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ உறுதுனையாவாரா.....??

இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழரின் காவலராய் திகழ எல்லாம் வல்ல இறையணை வேண்டுகிறோம் தமிழ் இனத்தின் சார்பில்......

விக்னேஸ்வரன் வாழ்க்கை வரலாறு

இலங்கை கொழும்பு புதுக்கடையில் 1939 அக்டோபர் 23ம் தேதி பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி. யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள்.

தந்தை அரசு ஊழியர், இலங்கையின் விக்னேசஸ்வரன் தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார்.

தனது 11வது வயதில் விக்னேஸ்வரன், கொழும்பு ராயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார்.பின்னர் லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

1979 மே 7ல் நீதித்துறையில் இணைந்தார். ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

[1987ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார்.1988ல் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார்.] 1995ம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார். 2001 மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.2004 அக்டோபரில் பணி ஓய்வு பெற்றார்.

இப்போது நடந்து முடிந்துள்ள வட மாகாண தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக கட்சி தலைமையால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.ராக்கி
சோரம் போகாத வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அகவை 76இல் இன்று Reviewed by NEWMANNAR on October 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.