நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் நியமனம்...
நேபாளத்தின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பெண்கள் உரிமைகள் பிரசாரகரான பித்யா தேவி பந்தாரி அந்நாட்டு பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.நேபாளத்தின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இரண்டாமவராக பித்யா தேவி பந்தாரி (54 வயது) விளங்குகிறார்.
தற்போது அவர் நேபாள ஆளும் பொதுவுடைமை கட்சியின் உப தலைவராக உள்ளார்.அவர் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நேபாளத்தின் பாதுகாப்பு அமைச்சராக சேவையாற்றியுள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. ஷர்மா அலி தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பித்யா தேவி பந்தாரி பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தைச் சேர்ந்தவராவார்.
ஆண்கள் செல்வாக்குப் பெற்று விளங்கும் நேபாள அரசியலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பெண்ணொருவராக பித்யா தேவி பந்தாரி விளங்குகிறார்.அவர் நேபாளத்தில் முடியாட்சி கலைக்கப்பட்ட பின்னர் 2008 ஆம் ஆண்டில் அந்நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ராம் பரன் யாதவின் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் நியமனம்...
Reviewed by Author
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment