ஜெனிவா பிரேரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளை விடுவிக்க முயற்சி - திவயின பத்திரிகையில் தகவல்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள 230 முன்னாள் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்கள் ஜெனிவா பிரேரணையின் படி உள்ளக பொறிமுறையின் மூலம் அவர்கள் மீது யுத்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் அவர்களை விடுவிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றதென தெரியவந்துள்ளது என்று திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் பொறிமுறையை உருவாக்குவதற்கு முன்னர் இப்புலி செயற்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டுமென்பதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகளின் நோக்கமாக உள்ளதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் புலி செயற்பாட்டாளர்கள் கொடூரமான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யுத்த குற்றங்களில் ஈடுபட்ட புலி செயற்பாட்டாளர்களுக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விமானங்கள் மீது மீசெல் தாக்குதல் மேற்கொண்டமை, கடற்படை கப்பல் வள்ளங்களை தகர்த்தமை, குழந்தைகள் உட்பட சிவிலியன்களை கொலைசெய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்னாள் புலிகள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
உள்ளக பொறிமுறை ஆரம்பமாவதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் பிரதாணி விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா பிரேரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளை விடுவிக்க முயற்சி - திவயின பத்திரிகையில் தகவல்...
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment