சம்பந்தன் கிரீடத்தை சூட்டிக்கொள்ளட்டும்...
பெயரளவில் இன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றது. கிரீடம் சூட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கிறார். வேண்டுமானால் சம்பந்தன் அந்த கிரீடத்தை வைத்துக்கொள்ளட்டும். ஆனால் நாங்கள் எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை வகிக்கின்றோம் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த அணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு மூத்த அரசியல் தலைவர். எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்துக்கொள்ளட்டும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியடைவதாக இருந்தால் எமக்குப் பரவாயில்லை. ஆனால் நாங்கள் எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி விவகாரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
எமது அணியே உண்மையான எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகிறது. எமது அணியில் அதிகமான உறுப்பினர்கள் உள்ளதுடன் எதிர்க்கட்சிக்கான உரிய பங்களிப்பையும் செய்து வருகிறோம். ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நாட்டைத் தெளிவுப்படுத்துவதே எமது தற்போதைய தலையாய நோக்கமாக காணப்படுகின்றது.
பெயரளவில் இன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றது. கிரீடம் சூட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய முறையான செயற்பாடுகளை எமது அணியே மேற்கொள்கிறது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை நாங்கள் வகித்துக்கொண்டிருக்கின்றோம். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு மூத்த அரசியல் தலைவர். எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்துக்கொள்ளட்டும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியடைவதாக இருந்தால் எமக்குப் பரவாயில்லை.
ஆனால் நாங்கள் எதிர்க்கட்சிக்குரிய வகிபாகத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். எமது அணியில் அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாகவும், எனவே எமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டுமென்றும் நாம் கோரிவருகின்றோம். இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் எழுத்து மூலமும் வாய் மூலமும் முன்வைத்து விட்டோம். ஆனால் சபாநாயகர் எமது விடயத்தை உரிய முறையில் கவனிப்பதாக தெரியவில்லை.
நாம் பல தடவை சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். எனினும் எமக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சம்பந்தன் கிரீடத்தை சூட்டிக் கொள்ளட்டும். நாங்கள் மக்களுக்குரிய சேவையை உரிய முறையில் முன்னெடுப்போம் என்றார்.
சம்பந்தன் கிரீடத்தை சூட்டிக்கொள்ளட்டும்...
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment