அண்மைய செய்திகள்

recent
-

வட பகுதி பேருந்துகளை சோதனையிட உத்தரவு! நிமல் சிறிபால டி சில்வா


வடபகுதியில் வழித்தட அனுமதிப் பத்திரமின்றிப் பயணிக்கும் பேருந்துகளை இனம் கண்டு பஸ் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.


அரசை ஏமாற்றி, திறைசேரிக்குச் சேரவேண்டிய பணத்தைச் செலுத்தாது பஸ் உரிமையாளர்கள் இவ்வித சட்டவிரோதச் செயற்பாட்டில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு தமக்குண்டு எனக் காட்டிக் கொள்ளும் வகையில் அவர்களது படங்களைத் தமது பஸ்களில் காட்சிப்படுத்தியும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மிரட்டல்விடுத்தும் பஸ் உரிமையாளர்கள் இத்தகைய சட்டவிரோத பஸ் சேவைகளை நடத்தி வருகின்றனர்.

இத்தகையோரது குற்றத்துக்காக அறவிடப்படும் பத்தாயிரம் ரூபா அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நான் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்.

அதேவேளை கேள்விகோரல் நடைமுறை மூலம் வழித்தட அனுமதிப்பத்திரம் பெறுவோர் சட்டபூர்வமற்ற பஸ் சேவையை மேற்கொள்வோரது செயற்பாடுகளால் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது.

எனவே வடபகுதிக்கு பஸ் சேவைகளை மேற்கொள்ளும் பஸ் உரிமையாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்குரிய கட்டணங்களைச் செலுத்தி வழித்தட அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு பஸ் உரிமையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டில் சமாதானச் சூழல் உருவாக்கப்பட்ட பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வடபகுதிக்குப் பயணம் மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

எனவே தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததான வவுனியா நகரில் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் மத்திய நிலையமொன்றை நிறுவ முன்வந்தது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவற்றில் நிலவும் குறைபாடுகள் நேர் சீர் செய்யப்பட்டு மக்கள் தமது பயணங்களை இலகுவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
வட பகுதி பேருந்துகளை சோதனையிட உத்தரவு! நிமல் சிறிபால டி சில்வா Reviewed by NEWMANNAR on October 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.