மன்னார் புதைகுழி வழக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் இருந்து மன்னார் பொலிசாருக்கு கைமாறுகிறது-Photos
மன்னார் புதை குழி வழக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கும் படி நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஏற்கனவே மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகாமையில் உள்ள சந்தேகத்திற்கு இடமான கிணற்றையும் அகழ்வு செய்வதற்காக மன்னார் நீதிமன்றினால் நடவடிக்கை எடுக்கபட்டிருக்கின்ற போதும் இவ் அகழ்வு பணியில் தொடர்ந்து கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேகத்திற்கு இடமான கிணற்றினை அகழ்வு செய்வதற்கு தாம் முன்னின்று இவ் அகழ்வு பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இதை மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கும் படியும் குற்றத்தடுப்பு பொலிசார் மன்றில் தெரிவித்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி சம்பவத்தை தொடர்ந்து அங்கு அகழ்வு செய்யபட்ட புதைகுழியில் இருந்து 83 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது சம்பந்தமான வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு சம்பந்தமாகவும் அதற்கு அருகாமையில் இருக்கும் கிணறு ஒன்றும் அகழ்வு செய்யபடவேண்டும் என காணாமல்போனவர்களின் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளின் வேண்டுகோளுக்கினங்க இவ் அகழ்வு சம்பந்தமான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜ முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணாமல்போனோர் சார்பாக சட்டத்தரணிகள் ஜி.ராஜகுலேந்திரா, வி.எஸ்.நிறைஞ்சன், திருமதி.றனித்தா ஞானராஜா ஆகியோருடன் மன்னார் சட்டத்தரணிகளின் சங்கம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் தலைமையில் மன்னார் சட்டத்தரணிகளும் இவ்வழக்கில் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கில் மேற்படி சட்டத்தரணிகளுடன் குற்றத்தடுப்பு பொலிசாரும் வழக்கில் ஆஜராகியிருந்தனர்.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் மரபணு சம்பந்தமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கும்படி மன்னார் நீதிமன்றம் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கையை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை
அதாவது இவ் எச்சங்கள் ஆணுடையதா? பெண்ணுடையதா? எந்த காலத்து எச்சங்கள் என்ற பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்தது.
ஆனால் அந்த அறிக்கையை இன்று சமர்ப்பிக்க முடியவில்லை என குற்றத்தடுப்பு புலனாய்வு பொலிசார் மன்றில் தெரிவித்திருந்த நிலையில் அடுத்த தவணையில் இதனை சமர்ப்பிப்பதாகவும் மன்றில் தெரிவித்தனர்.
சர்வதேச ரீதியில் மரபனுவினை ஆய்வுசெய்யவேண்டும் என காணாமல்போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பித்ததிற்கு அமைய மன்று ஏற்றுகொண்டதுடன் இது சம்பந்தமாகவும் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஏற்கனவே அதே இடத்தில் அடையாளம் இடபட்டிருக்கும் சந்தேகத்திற்கு இடமான கிணற்றினையும் அகழ்வு செய்வதற்கு தாம் முன்னின்று இவ் அகழ்வு பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இதை மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்குமபடியும் குற்றத்தடுப்பு பொலிசார் மன்றில் தெரிவித்தனர்.
இதனை மன்னார் பொலிசாரும் எற்றுகொண்டு அடுத்த தவணையில் சந்தேகத்திற்கு இடமாக இருக்கும் கிணற்றை அகழ்வு செய்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன் வருவதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கிணற்றுக்குள் இருக்கும் மணல்களை அகழ்வு செய்யும்படி நீதவான் மன்னார் பொலிசாருக்கு உத்தரவிட்டார். இதேவேளையில் சட்டமாஅதிபரின் ஆலோசணையும் தங்கள் பெறவேண்டிய அவசியம் இருப்பதாகவும் குற்றத்தடுப்பு பொலிசார் மன்றில் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இவ்வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மன்னார் புதைகுழி வழக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் இருந்து மன்னார் பொலிசாருக்கு கைமாறுகிறது-Photos
Reviewed by NEWMANNAR
on
October 07, 2015
Rating:
No comments:
Post a Comment