இலங்கை அரசாங்கம் கூறியது போல் 65 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தந்தால் மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-சி.வி.விக்னேஸ்வரன்.
வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து மடு தட்சனா மருதமடு பாடசாலையில் மேற்கொண்ட குறை நிவர்த்தி நடமாடும் சேவையினூடாக மக்களைக்கு சிரமமற்ற சேவையினை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் பிரச்சினைகளை தாமதம் இன்றி நிவர்த்தி செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த குறை நிவர்த்தி நடமாடும் சேவை தட்சனா மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.இதன் போது வடக்கு மகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
குறித்த நடமாடும் சேவை பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.எங்களையும் மக்களையும் ஒன்று சேர்த்து மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அவதானிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வழக்கமாக ஏற்படுகின்ற தாமதங்களையும் குறைத்துள்ளது.
ஒருவர் வந்து தனது பிரச்சினையை எங்களிடம் தொரிவித்தால் அதனை நாங்கள் செயலாளருக்கு அனுப்பி செயலாளர் அது தொடர்பில் உரிய கிராம அலுவலகரினூடாக அதனை அறிந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொணடு அதனை எமக்கு சமர்ப்பிக்க சுமார் இரண்டு மாதங்களாகின்றது.
தாமதத்தினையும்,மக்களின் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக நாங்கள் இப்படிப்பட்ட நடமாடும் சேவையினை மேற்கொள்ளுகின்றோம்.
எங்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படைத்தண்மை ஏற்படுத்தவும் இதனைச் செய்கின்றோம்.
இல்லை என்றால் ஏதோ காரணங்களுக்காக சில விடையங்களை நாங்கள் கிடப்பில் வைத்து விட்டு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காது சில நேரங்களில் இருக்கின்றோம்.
அவ்வாறன நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக அனைத்து அலுவலகர்களையும் ஒன்றினைத்து செயற்படுகின்ற போது இப்படிப்பட்ட விடையங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடிகின்றது.
மக்களுக்கு பதில் கூற வேண்டிய ஒரு கடற்பாட்டை நாங்கள் நிறைவு செய்கின்றோம்.
குறிப்பாக சில நேரங்களில் சில விடையங்கள் எமக்கு தெரியப்படுத்தப்பட்டாலும் ஏதோ காரணங்களுக்காக அவ்விடையம் தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால் மக்கள் மிகவும் மன வருத்தப்பட்டுக் கொள்ளுகின்றனர்.
கிடைக்குமோ அல்லது கிடைக்காதா என்ற விடையத்தை எம்முடன் கதைத்து ஆலோசிப்பதால் அதற்கான தீர்வு அன்றைய தினமே கிடைக்கின்றது.
அதனையும் நாங்கள் குறித்த நடமாடும் சேவையினூடாக ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.நாங்கள் அனைவரும் சேர்ந்து இப்படி நடவடிக்கையினை ஏற்படுத்திக்கொள்ளுவதினால் இவ்வாறான இடங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றது எனபது தெரிய வருகின்றது.
இதன் மூலம் எப்படிப்பட்ட பிரச்சினை எதற்கு என்ன தீர்வு என கலந்துரையாட முடிகின்றது.
பின் தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் மன ஏக்கங்களையும் எங்களினால் புறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையிலே தான் இப்படிப்பட்ட நடமாடும் சேவையானது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதற்காக நாங்கள் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
குறை கேள் பவனி என்று நாங்கள் சில தூர பிரதேசங்களுக்குச் சென்று அங்கு நாங்கள் அவர்களின் குறைகளை கேட்டு வருகின்றோம்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனலை தீவு,எழுவை தீவு போன்ற இடங்களுக்குச் சென்று அவர்களின் குறைகளைக் கோட்டு சில விடையங்களை உடனுக்குடன் தீர்க்க தீர்மானங்களை மேற்கொண்டோம்.
ஏனைய விடையங்களை குறித்துக்கொண்டு வந்து நடவடிக்கைகளை எடுக்கின்றோம்.சில தருணங்களிலே மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை இருக்கின்றது.குறிப்பாக தங்களுக்கு வீட்டு வசதி இல்லை வீடு தேவை என எல்லோறும் கேட்கின்றனர். இது மிகவும் சிக்கலான விடையம்.வீடு வழங்குவதற்கான நிதி எங்களிடம் இல்லை.
அரசாங்கம் எதாவது நிதி உதவி தர வேண்டும்.அல்லது வெளிநாடு தர வேண்டும்.இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில் சுமார் 40 ஆயிரம் வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.அதற்பொது அதனை நிறுத்தி விட்டார்கள்.
மக்கள் தொடர்ந்து வீடுகள் கேட்கின்ற பொது அதனை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது இலங்கை அரசாங்கம் 65 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தருவதாக கூறியுள்ளார்கள்.அவ்வாறு ஏற்படின் மக்களின் அந்த பிரச்சினைகளையும் நாங்கள் விரைவிலே தீர்க்க முடியும்.
ஆகவே மக்கள் சில கேல்விகளை எங்களிடம் கேட்கும் போது அதற்கான பதிலை அல்லது தீர்வினை உடனுக்குடன் வழங்க முடியாத நிலை உள்ளது.
ஆனால் அதை விட நாளாந்த பிரச்சினைகளான பிறப்பு,இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள்,காணி உறுதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு நாங்கள் உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கூறிய தீர்வினை பெற்றுக்கொடுக்கின்றோம்.இது மக்களுக்கு நன்மை தரும் என்ற எண்ணத்திலே நாங்கள் யாவறும் சேர்ந்து இந்த நடமாடும் சேவையினை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் கூறியது போல் 65 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தந்தால் மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-சி.வி.விக்னேஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
October 30, 2015
Rating:
No comments:
Post a Comment