வெளிநாட்டு பணியாளர்களுக்கான உடன்படிக்கை கையொப்பமிடும் நடவடிக்கை நாளை முதல் ரத்து
வெளிநாட்டு பணியாட்கள் தொடர்பான சேவை உடன்படிக்கையை கைச்சாத்திடும் பிரிவு நாளை முதல் ரத்து செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் இந்த உடன்படிக்கை தொழில் வழங்குநர் மற்றும் பணியாட்களுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பணியாட்கள் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரியின் முன்பாக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.
எனினும், பணியாட்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் நடவடிக்கை இரத்து செய்யப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கான உடன்படிக்கை கையொப்பமிடும் நடவடிக்கை நாளை முதல் ரத்து
Reviewed by NEWMANNAR
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment