அண்மைய செய்திகள்

recent
-

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது-குரு முதல்வர் விக்டர் சோசை.-Photos



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இன்று சனிக்கிழமை மாலை முதல் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை கை விட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார்.

மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதி நிதியாக மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று 6 ஆவது நாளக இன்று உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பால்,பழம் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கி அவர்களுடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

-இதன் போது உண்ணாவிரத்ததை கைவிட்ட அரசியல் கைதிகள் எதிர்வரும் 07 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு கிடைக்காது விட்டால் மீண்டும் உண்ணாவிரத்தில் ஈடுபடப்போவதாக அரசியல் கைதிகள் தெரிவித்ததாக குரு முதல்வர் தெரிவித்தார்.

-இதே வேளை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல வழிகளிலும் உதவி புரிந்த மூவின மக்களையும், எதிர் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட மாகண சபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் தமது நன்றிகளை அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.மன்னார் மறைமாவட்ட குரு முதல்வருடன் பொறியியலாளர் ஏ.தேவானந்த்,மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் கௌரவ தலைவர் ஜே.ஜே.கெனடி ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது-குரு முதல்வர் விக்டர் சோசை.-Photos Reviewed by NEWMANNAR on October 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.