தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கனடா? குழப்பத்தில் தமிழ் பெற்றோர்கள்!!
கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம்.
இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை தற்போதைய கன்சர்வேட்டிவ் அரசு வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தொலைபேசி கொட்லைன் தமிழர்களிற்கு பெரிய தலையிடியைக் கொண்டு வந்துள்ளது. தமிழர்கள் தங்களது மூதாதையர் செய்து வந்த மதச்சடங்கான பூப்புனித நீராட்டு விழாவினை கொண்டாடுவது இப்போது சிக்கலிற்குள்ளாகியுள்ளதா என்ற குழப்பத்தில் பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த விழா ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் நடைபெறும் ஒரு சமய சம்பிரதாயமாக இருந்தாலும், இது குறித்த தெளிவற்ற நிலை மற்றைய இனத்தவர்களிடையே இருப்பதால் அவர்கள் இந்த பெண் குழந்தைகளைப் தாங்கள் பாதுகாப்பதாக எண்ணி பொலிசாருக்கு அறிவிக்கக்கூடிய நிலை தோன்றியுள்ளது.
குறிப்பாக இவ்வாறான பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாமல் தவிர்க்கும் போது ஆசிரியர்களே வீடுகளிற்கு தொலைபேசி அழைத்து பிள்ளைகளை ஒரு வாரம், இரு வாரம் என வீட்டில் நிறுத்தாமல் அடுத்தடுத்த நாளே பாடசாலைக்கு அனுப்புமாறு நிர்ப்பந்திக்கிற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.
அத்தோடு ஏன் அந்தச் சிறுமியை மணப்பெண் போன்ற கோலத்தில் அல ங்கரிக்கிறீர்கள் என்ற கேள்வியை வேற்றினத்தவர்கள் பலரும் கேட்டிருக்கின்றனர். பல்லக்கில் தூக்குதல், ஊஞ்சலில் வைத்து ஆட்டுதல், கேக் வெட்டுதல் என்ற பலதும் அவர்களை குழப்பிப் போட்டுள்ளது.
பூப்புனித நீராட்டு விழா கொண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் முன்னைய காலங்களில் இரண்டிருந்தன. முதலாவதாக நூற்றாண்டிற்கு முன்பு ஒருவர் வாழும் காலம் 50 வயதாகவோ அல்லது 55 வயதாகவோ இருந்தது.
எனவே இப் பெண்பிள்ளைகளின் அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா போன்றவர்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்பே இறந்து விடக்கூடிய சூழ்நிலை இருந்ததால், அந்தப் பெண் பிள்ளையை மணக் கோல உடையில் மங்களகரமாக தாங்கள் பார்த்து மகிழ்வதற்காகவும், இரண்டாவதாக தங்கள் வீட்டிலுள்ள பெண் வயதிற்கு வந்து விட்டால் இன்னமும் எட்டு ஒன்பது ஆண்டுகளில் அவளிற்கு மணமகன் பார்க்க வேண்டும் என்பதை ஊருக்கு அறிவிப்பதாகவும் இருந்தது.
இப்போதும் பூப்புனித விழா மேற்படி இரு காரணங்களும் இல்லாமல் உற்றார், உறவினர் பெற்றோரின் ஒன்றுகூடலிற்காகவும், அந்தப் பெண்பிள்ளையை சிறுமி என்ற நிலையிலிருந்து இளவயது பெண்பிள்ளைகள் சமுதாயத்தில் இணைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆதிகாலத்திலோ அல்லது இப்போதோ இந்த விழாவிற்கு எந்தவித தப்பான அர்த்தமும் கற்பிக்க முடியாது. ஆனால் அயலவருக்கும், அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவருக்கும், அல்லது விழா மண்டபங்களில் வேலை செய்யும் வேற்றினத்தவருக்கும் ஏன் இதனைச் செய்கின்றோம் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதுபோலவே நீங்கள் உங்கள் கணணி, தொலைபேசி ஊடக அனுப்பும் செய்திகளும், பேஸ்புக், ருவிட்டர், இன்ஸ்ராகிராம், வட்சாப், வைபர், ஸ்கைப் ஊடக கதைப்பவை, பரிமாறுபவை என்பன இப்போதுள்ள என்ற C51 சட்டத்தின் பிரகாரம் உங்களிற்குத் தெரியாமலே கண்காணிக்க முடியும்.
தமிழர்கள் குறிப்பாகப் பயன்படுத்தும் இப்ப வந்தனென்டா கொண்டு விட்டுடுவன் , அவனைக் கொல்லவேணும் ஒரு ஆள் இப்ப என்னட்டை அடி வேண்டிச் சாகப் போறார் (அல்லது போறா) என்ற வார்த்தைகளிற்கு உண்மையான அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் அவற்றை உளவுபார்ப்பவர்கள் மொழி பெயர்த்தால் மேற்படி நபர் கொலைக் குற்றச்சாட்டில் உள்ளே செல்லும் அபாயமும் உள்ளது.
கனடா பழைய கனடாவாக இல்லை. கன்சவேட்டிவ் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்களில் பாரிய தளர்வுகளைத் தாங்கள் ஏற்படுத்தப்படுத்துவோம் என அறிவித்துள்ளன.
சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் - கனடிய அமைச்சர்
கனடிய தேர்தல் களத்தில் தமிழரின் நிலை சாதனையா...? வேதனையா...?
புலம்பெயர்ந்து வாழும் ஈழக் தமிழர்களில் கணிசமான ஈழத் தமிழர்கள் கனடிய தேசத்தில் வசிப்பது யாவரும் அறிந்ததே. வசிக்கின்ற நாம் அமைதியாகவும் முடியுமானவரை சந்தோசமாகவும் வாழும் நிலை உள்ளதென்பதை எம்மால் உணரப்படுகின்றது.
1956ம் ஆண்டு தொடக்கம் இன்று வரையிலான கடந்த இவ்வளவு ஆண்டுகளும் தமிழர்கள் தமக்கான உரிமைக்காக போராடிய / போராடிக்கொண்டிருக்கின்ற வழிமுறைகளை யாவரும் நன்கறிவர். இன்றைய நிலையில் தமிழரிடம் பணபலம் இருந்தாலும் ஸ்திரமான பொருளாதார தன்மையானது கேள்விக்குறியான தன்மையிலேயே உள்ளது.
புலம்பெயந்து இருக்கக்கூடிய அநேகமான நாடுகளில் தமிழர்களின் அரசியல் பிரவேசம் என்பது மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
வழமைக்கு மாறாக கனடிய தேசத்தின் தேர்தலில் கன்சர்வேட்டிவ், லிபரல், என்.டி.பி., பசுமைக் கட்சி போன்றவை வழமைக்கு மாறாக ஈழத் தமிழர்களின் அரசியற் பலத்தின் ஆழத்தை உணர்ந்து தத்தம் கட்சிகளில் வேட்பாளர்களாக தமிழர்களை நிறுத்தியுள்ளது.
இவ் விடத்தில் தான் தமிழர்களின் சுயசிந்தனைக்கு ஒரு வினா மறைக்கப்பட்டு விடுகிறது. காலாகாலங்களில் தமிழர்களாகிய நாம் எம்மை மேற்குலகு பயன்படுத்துகிறது, இந்தியா மற்றும் தென்னிலங்கை பயன்படுத்துகிறது என வரிக்குவரி கூறிவருகின்றோம்.
பயன்படுத்திய யாரை நாம் மதிநுட்பமாக பன்படுத்தியிருக்கின்றோம் என்றால் விடை தலைகுனிவே.. அந்த வகையிலே கனடிய தேர்தலிலே பழம்பெரும் கனடிய கட்சிகள் ஈழத்தமிழரை இலக்கு வைத்திருக்கின்றது.
சுருங்கக் கூறின் ஈழத்தமிழரைப் பயன்படுத்துகின்றது என்றே பொருள் கூறலாம்.
இவ்விடத்தில் ஈழத் தமிழர்கள் அந்தக் கட்சியினை எப்படி பயன்படுத்தப்போகின்றார்கள் என்ற வினா இன்றுவரை விடையின்றி கானல்நீராகவே காணப்படுகின்றது.
சுமார் 6 தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள கனடிய தேர்தலில் எத்தனை தமிழரை தமிழர்கள் பாராளுமன்றம் அனுப்புவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது. காரணம் பல்லின பல்மொழி பேசுகின்ற பல வேட்பாளர்கள் களத்தில் குதித்திருக்கின்ற போதிலும் தமிழ் வாக்காளர்கள் கணிசமாக உள்ள பகுதிகளிலே தமிழ் வேட்பாளர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யார் நல்லவர்... யார் கெட்டவர் என்பது இங்குள்ள வினாவல்ல.. யாராவது ஒரு தமிழரை அவர்கள் சார்ந்து நிற்கக்கூடிய தொகுதிகளிலிருந்து பாராளுமன்ற அனுப்புவதே வரப்போகின்ற வருடங்களில் ஈழத்தமிழருக்கு மிகவும் பிரதானமானதொன்றாகும்.
காரணம் ஐ.நா மனித உரிமைச் சபையில் இன அழிப்பு தொடர்பிலான கருத்துக்கள் கூர்மையடை தொடங்கிய நிலையில் சர்வதேச நாடுகளின் ஆதரவு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். அந்த நாடுகளின் ஆதரவுகளை இலகுவாக்கி கொள்வதானால் கனடிய தேர்தலை கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் பரீட்சித்துப் பார்ப்பது காலத்தின் கட்டாயம்.
ஏனெனில் எதிர்வரும் வருடங்களில் கனடிய அரசு சர்வதேச அளவில் இலங்கை விவகாரங்களில் கையாளப்போகும் அரசியல் நகர்வுகளின் போது அதிகளவான ஈழத்தமிழர்களை பாராளுமன்றம் அனுப்புவோமேயானால் பாரிய சதிகளை அந்த மண்ணிலே தமிழனால் முறியடிக்க முடியும்.
வரலாற்றுச் சாதனைகளை படைக்கும்ச் அந்தர்ப்பத்தை இறுகப் பற்றிப் பிடிப்பீர்களா.....?
பிடிப்பதானால் எதிர்வரும் 19ம் திகதி வாக்குரிமை பெற்ற ஒவ்வொருவரிடமும் உள்ள வாக்கெனும் ஆயுதத்தை சரியான இடத்தில் குத்துவீர்களாக இருந்தால் புலரும் 20ம் திகதி காலையில் தமிழரின் இராஜதந்திர போராட்டத்தில் ஒரு மைல்கல்லினை பெற்றுக்கொள்ளமுடியும்.
கவலையீனமாக கவனக்குறைவாக வாக்களிப்பைத் தவிர்ப்பீர்களேயானல், அதனால் வரப்போகும் பழி பாவங்களுக்கும் கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனும் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனவே ஒக்டோபர் 19ஐ கனடியத் தமிழர்கள் இறுகைப் பிடித்தால் அம்மண்ணில் வரலாற்றுச் சாதனையும் ஈழத்தமிழரின் எதிர்காலமும் வெற்றியுடன் வீறுநடை போடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
எனவே கனடிய தமிழர் வாக்காளப் பெருமக்களே உங்கள் வாக்குரிமைஐ எவருக்காகவேனும் வீண்டிக்காது 19ம் திகதி உங்கள் சோம்பல்களைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் தமிழருக்கான விடியலை உருவாக்க உங்கள் வாக்குகளை யாருக்கேனும் போடுங்கள்... இது உங்களூக்கான சுய உரிமை. யாருக்கேனும் விட்டுக்கொடுக்காது உங்கள் உரிமையை வீணடிக்காது தயாருங்கள் உங்கள் உரிமைக்காக... தமிழரின் விடிவுக்காக....!
- இது ஒரு புலம்பெயர் தமிழிச்சியின் குமுறல் -
கனடிய தேர்தல் � வெற்றி பெறப்போகும் தமிழ் வேட்பாளர் யார்..?
கனடா நாட்டில் எதிர்வரும் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறியுள்ள 6 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கனடா நாட்டின் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில், 19ம் திகதி நடைபெறள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த பொது தேர்தலில் கனடா நாட்டின் முக்கிய 3 கட்சிகளில் இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறியுள்ள 6 தமிழ் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகின்றனர்
1. ராதிகா சிற்சபைஈசன்
இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறினார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ் பூர்வீகம் கொண்ட முதல் கனடிய குடிமகளாக தேசிய ஜனநாயக கட்சியில் சேர்ந்து Scarborough � Rouge River ஆசனத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
பல்வேறு சமுதாயப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ராதிகா, கடந்த 2012ம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை முன்னெடுத்து காட்டியதற்காக �Personality of the Year� என்ற விருதையும் வென்றுள்ளார்.
தற்போது, மீண்டும் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் Scarborough Rouge North ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.
2. ஹரி ஆனந்தசங்கரி
இலங்கை தமிழரான இவர் கனடா நாடு மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனித உரிமைகள் வழக்கறிஞர் ஆவர். கனடாவில் குடியுரிமை பெற்றுள்ள இவர், அங்குள்ள தமிழ் அமைப்புகள் பலவற்றில் சில உயரிய பொறுப்புக்களை வகித்தவர்.
தற்போது கனடாவின் சுதந்திர கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக Scarborough Rouge-Park ஆசனத்தில் போட்டியிட்டு வருகிறார்.
3. Rev.KM சாந்திகுமார்
இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், அங்குள்ள தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வருகிறார்.
தற்போது, தேசிய ஜனநாயக கட்சியில் சேர்ந்துள்ள அவர், Scarborough Rouge-Park ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். (மேலதிக தகவல்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்)
4. செந்தி செல்லையா
Markham- Thornhill தொகுதியில், கனடிய தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான செந்தி செல்லையா NDP கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் அஞ்சல் தலையை வெளியிட்டு அதன்மூலம் பெறப்பட்ட நிதியை ஈழத்திற்கு அனுப்பியிருந்தவர்.
கனடாவின் குடிவரவாளர்களில் சிறந்த 75 நபர்களில் ஒருவராக 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. ரோஷன் நல்லரத்தினம்
இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்தவர். கடந்த 2005ம் ஆண்டில் கனடாவில் குடியேறிய அவர், சட்டம் மற்றும் தொழில்முறை அமுலாக்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.
தற்போது ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்துள்ள ரோஷன் Scarborough Southwest ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
6.கார்த்திகா கோபிநாத்
கனடிய தேர்தலில் (கிறீன் பார்ட்டி) பசுமைக் கட்சியில் பிரம்ப்டன் மேற்கு (Brampton West) பகுதியின் வேட்பாளராக இலங்கை தமிழரான கார்த்திகா கோபிநாத் நிறுத்தப்பட்டுள்ளார்
இலங்கையில் பிறந்து பின்னர் கனடாவின் ஒன்ராரியோவில் உள்ள Scarborough பகுதியில் வளர்ந்தவர் கார்த்திகா.
குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள், நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
தனது திருமணத்துக்கு பின் பிரம்ப்டன் பகுதியில் வசித்து வரும் கார்த்திகா பொது சேவை ஆற்ற விரும்பினார்.
அவரது கொள்கைகளும் கோட்பாடுகளும் பசுமைக் கட்சியுடன் ஒத்துப்போனதால் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கனடாவின் சுகாதாரம், சுற்றுசூழல், முதியோர் நலன், மனித உரிமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் அவசியம் குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளார்.
இந்திய ரெயின்போ அமைப்பின் ஆலோசனை குழுவில் பணிபுரிந்தபோது தனது சொந்தமான தமிழ் இனம் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்து நன்று தெரிந்துகொண்டார்.
Peel பகுதியில் வாழும் மக்கள் நீண்ட நாட்களாக குறைந்தவிலையில் குடியிருப்புகள், குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு தேவைகளுக்காக ஏங்கி தவிப்பதையும் அவர் நன்கு அறிவார்.
எனவே கார்த்திகா கோபிநாத்தை பிரான்ப்டன் மேற்கு (Brampton West) பகுதியின் வேட்பாளராக நிறுத்துவதில் கிரின் பார்ட்டி ஓஃப் கனடா பெருமை கொள்கிறது.
தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கனடா? குழப்பத்தில் தமிழ் பெற்றோர்கள்!!
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment