முப்பது வருடப் போர் வடக்கில் சிறுவர்களை உளரீதியாக கடுமையாக பாதித்துள்ளது!- பேராசிரியர் தயா சோமசுந்தரம்...
முப்பது வருட போர் வடக்கில் உள்ள சிறுவர்களை உளரீதியாக கடுமையாக பாதித்துள்ளது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மனோதத்துவத்துறை பேராசிரியர் கலாநிதி தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தி;ல் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றிய அவர், 57வீத வடக்கு சிறுவர்கள், இயல்பற்ற வகையில் செயற்படுகின்றனர். 29வீதத்தினர் போரின் பின் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தாக்கங்களின் குணங்குறிகளாக பயம், அழுத்தம் வலிப்பு, நோய், வயிற்றுப்புண், மற்றும் நாட்பட்ட சோர்வு என்பன இனங்காணப்பட்டுள்ளன.
பேராசிரியர் சோமசுந்தரத்தின் தனிப்பட்ட ஆய்வின்படி கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் 79வீதத்தினர் ஆயுதப்போரின் தாக்க வெளிப்பாட்டை கொண்டுள்ளனர்.
58 வீதமானோர் குண்டுவீச்சுகளை பார்த்துள்ளனர்.
40 வீதமானோர் எறிகணை மற்றும் மோட்டார் குண்டுவீச்சுக்களை பார்த்துள்ளனர்.
தமது வீடுகள் தாக்கப்படுவதை 40 வீதமானவர்கள் பார்த்துள்ளனர்
77வீதமானோர் பல்வேறு இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த உள தாக்கங்களால் நம்பிக்கை,நம்பகத்தன்மை, உணர்வுகள் என்ற இயல்பாக அபிவிருத்தி அடையவேண்டிய தன்மைகள் பாதிக்கப்படும்.இதன் காரரணமாக எளிதில் நிரந்தரமான தழும்பு ஏற்படும்.
இதேவேளை மருத்துவத்துறை மாணவர்களால் வன்னியில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 63வீதமான சிறுவர்கள் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மரணமாவதை பார்த்துள்ளனர்.
67வீதமானோர் மரணங்களில் இருந்து தப்பியுள்ளனர்.
43 வீதமானோர் எதிரிகள் சாவதை பார்த்துள்ளனர்.
80 வீதமானோர் ஆயுதப் போராட்டத்தில் அகப்பட்டுள்ள அனுபவத்தை கொண்டுள்ளனர்.
30வருட போர் காரணமாக வடக்கில் பாரம்பரிய கட்டுப்பாடு உடைந்து போயுள்ளது.
சிறுவர்கள் துஸ்பிரயோக சம்பவங்கள் 2007க்கும் 2014க்கும் இடையில் 32வீதத்தில் இருந்து 99வீதமாக அதிகரித்துள்ளது.
2013ம் ஆண்டில் வடக்கில் 19வீதத்தினர் இயல்பற்ற மூளை செயற்பாட்டை கொண்டிருந்தனர்.17வீதத்தினர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டிருந்தனர் என்று பேராசிரியர் சோமசுந்தரம் குறி;ப்பிட்டுள்ளார்.
முப்பது வருடப் போர் வடக்கில் சிறுவர்களை உளரீதியாக கடுமையாக பாதித்துள்ளது!- பேராசிரியர் தயா சோமசுந்தரம்...
Reviewed by Author
on
October 18, 2015
Rating:
No comments:
Post a Comment