அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தரவன்கோட்டையில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு: மக்கள் குற்றச்சாட்டு-Photos


மன்னார் நகர சபைக்குட்பட்ட தரவான்கோட்டை கிராமத்தில் மன்னார் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மன்னார் நகரசபை தனியார் காணியில் போடுவதால் சுகாதார சீர்கேடுகள் நிகழ்வதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனினும் இது தொடர்பான முறைப்பாடு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் கிராம மக்கள் ஈடுபட்டால் அவ்வப்போது குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தும் மன்னார் நகரசபை நிர்வாகம் மீண்டும் குப்பை கொட்டும் நடவடிக்கைகளை தொடர்வதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழவின் கவனத்திற்கு குறித்த கிராம மக்கள் கொண்டுவந்ததை அடுத்து,

இப்பகுதிக்கு அதன் தலைவர் அருட்தந்தை இமானுவேல் செபமாலை கடந்த புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதுடன் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தினார்.

நீண்டகாலமாக மன்னார் நகர சபையினால் மன்னார் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை குறித்த கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பல ஏக்கர் காணியில் போடப்படுவதாக தெரிவிக்கும் கிராம மக்கள் இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் நிகழ்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிகளவிலான ஈக்கள் வந்து சேருவதாகவும், துற்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிப்பதுடன், இது நிறுத்தப்படாவிட்டால் மேலும் கிராமத்தில் சுகாதார சீர்கேடுகளுக்கு ஏதுவாக இது அமையும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதேவேளை தனியாருக்கு சொந்தமான குறித்த பல ஏக்கர் காணியில் இருந்து மண் அகழ்வும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கிக்கும் மக்கள்,. கடலுக்கு மிக அண்மித்த குறித்த கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறிப்பாக இக்கிராமத்தை பகுதியில் பல வருடங்களுக்கு முன்னதாக வேறு இடங்களில் மண் அகழ்வு நடைபெற்று வந்தநிலையில் பல இடங்களில் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

எனினும் தற்பொழுது தனியார் ஒருவரின் பல ஏக்கர் காணியில் மண் அகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தனியாருக்கு சொந்தமான பல ஏக்கர் காணியில் மண் அகழ்வு செய்துவிட்டு அவ்விடத்தை நிரப்புவதற்கு மன்னார் நகர சபையினால் குப்பைகள் கொட்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவ் விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இதை கொண்டு வந்திருந்தபோதிலும் அதிகாரிகள் அசமந்தபோக்காக நடந்துகொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு மக்கள் இதனை கொண்டு சென்று தமது எதிர்ப்பினை தெரிவிக்கும்போது, தற்காலிகமாக குறித்த குப்பை கொட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும் பின் தொடர்ந்து குப்பபைகள் கொட்டப்பட்டுவ ருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் ஈக்களின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் மக்கள்,

இவ் விடயத்தில் விரைந்து செயற்பட்டு குறித்த குப்பைகள் நிரப்பப்பட்டுள்ள பகுதியை சுத்தம் செய்து குப்பைகளை புதைத்து சுகாதார சீர்கேட்டினை நிவர்த்தி செய்யும்படி மன்னார் நகரசபை மற்றும் எனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

குறித்த கிராம மக்களுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.









மன்னார் தரவன்கோட்டையில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு: மக்கள் குற்றச்சாட்டு-Photos Reviewed by NEWMANNAR on October 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.