யுத்தம் காரணமாக விதவைகளான பெண்களுக்கு உதவுங்கள்!– அமெரிக்காவிடம் கோரிய வடக்கு முதல்வர்
யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த சுமார் 33 ஆயிரம் பெண்களுக்கு அமெரிக்காவின் உதவியை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கெத்தரின் ரனிசேலிடம் முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதுவர், யுத்தம் காரணமாக விதவைகளான பெண்களுக்கு உதவ முடியும், அதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கத்தை ஏற்படுத்தி, விதவை பெண்களின் தேவைகளை தனித்தனியாக கண்டறிந்து தேவைக்கு அமைய உதவுவது முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு உதவிகளை வழங்கும் போது வடக்கு மாகாணத்திற்கு நேரடியாக உதவிகளை வழங்க முடியாது எனவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக உதவிகளை வழங்க இருத்தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி மிக விரைவில் உதவிகளை வழங்க தூதுவர் இணங்கியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
யுத்தம் காரணமாக விதவைகளான பெண்களுக்கு உதவுங்கள்!– அமெரிக்காவிடம் கோரிய வடக்கு முதல்வர்
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:

No comments:
Post a Comment