மன்னாரில்-மாவட்ட பொது தொழில் சேவை நிலையம் ..
மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சர்வதேச தொழில் நிறுவனம், மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மனிதவலு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் மாவட்ட பொது தொழில் சேவை நிலை யம் ஒன்றை நிறுவியுள்ளது.
இந்த நிலையம் 2015 செப்டெம்பர் 30 ஆம் திகதி இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் ஆலோசகர் வில்லியம் வேர்பொயெஸ்ட், மனிதவலு மற்றும் தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.ஜி.ஜி.ஜே. தர்மசேன மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர் தேச ப்பிரிய ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
தொழில் சந்தை விபரங்கள் மற்றும் தொழில் வழிகாட்டல்களை இளைஞர்கள் பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான சேவை நிலையமாக மன்னார் மாவட்டத்தில் மாவட்ட பொது தொழில் சேவை நிலையம் செயற்படவுள்ளது.
இந்த நிலையத்தை நிறுவும் செயற்பாடுகளுக்கு மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி ஊடாக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த அரை மில்லியன் மக்களை உள்ளடக்கி அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளை பெற்றுக் கொடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஐரோப்பிய ஒன்றியம் 60 மில்லியன் யூரோவை உதவியாகவழங்கியுள்ளது.தொழில் தேடும் 25 இளைஞர்களுக்கு வழிகாட்டல் செயற்பாடொன்றை மாவட்ட செயலகத்தில் முன்னெடுத்திருந்ததுடன் மாவட்ட பொது தொழில் சேவை நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன.
தொழில் தேடுநர்கள், ஊழியர்கள், தீர்மானம் மேற்கொள்வோர் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குநர்கள் ஆகியோரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை மாவட்ட பொது தொழில் சேவை நிலையம் முன்னெடுக்கும்.
மன்னாரில்-மாவட்ட பொது தொழில் சேவை நிலையம் ..
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment