வித்தியா மற்றும் சேயா வன்புணர்வு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கக்கோரி கையெழுத்துப் போராட்டம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா மற்றும் சிறுமி சேயா ஆகியோரை வன்புனர்ந்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபடச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கக் கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
மாணவி வித்தியா மற்றும் சிறுமி சேயா ஆகியோரை வன்புணர்ந்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் இக் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
வித்தியா மற்றும் சேயா வன்புணர்வு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கக்கோரி கையெழுத்துப் போராட்டம்!
Reviewed by NEWMANNAR
on
October 06, 2015
Rating:

No comments:
Post a Comment