அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் தேசிய உணவு உற்பத்திக்கான நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடக்கி வைத்த தேசிய உணவு உற்பத்திக்கான நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நேற்று காலை யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்றது.

இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வாழ்வின் எழுச்சிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பழமரக் கன்றுகளை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

மேலும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்படி நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு உணவு இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தி எமது நிலவளங்களை அதிகமாக பயன்படுத்தி அதியுச்ச பலனை பெறுவதன் மூலம் இலங்கையை தன்னிறைவான தேசமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பால், கால்நடை மற்றும் மீன்பிடி உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் உணவு இறக்குமதிக்காக செலவிடப்படும் 200 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தல், இரசாயன பசளை பாவனைகளை கட்டுப்படுத்துவதோடு,

சுற்றுச்சூழலுக்கு இசைவான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரம்மிக்க உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இந்த உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கம்.

எனவே விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இதற்கான ஆதரவுகளை முழுமையாக வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தேசிய உணவு உற்பத்திக்கான நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது! Reviewed by Author on October 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.