அண்மைய செய்திகள்

recent
-

இந்திய கொலை வழக்கு விசாரணையில் பங்கேற்கும் டக்ளஸ்

1987ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழ்கு விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்க உள்ளார்.

வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையிலிருந்தே இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் பங்கேற்க உள்ளார்.

சென்னை நீதிமன்றில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று சென்னை சோலைமேடு பகுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்றில் விசாரணைகளுக்கு பங்கேற்காத காரணத்தினால் டக்ளஸிற்கு பிணையில்லா பிடிவிராந்து உத்தரவினை இந்திய நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இலங்கையில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் ராஜதந்திர வரப்பிரதாசங்களுடன் இந்தியா பயணம் செய்த போது, டக்ளஸை இந்திய காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சாட்சியமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்குடன் தொடர்புடைய ஏனனைய சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து டக்ளஸ் விடுத்த கோரிக்கைக்கு இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தேவை ஏற்படும் போது டக்ளஸ் நேரடியாக நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென நீதவான் செல்வம் அறிவித்துள்ளார்.
இந்திய கொலை வழக்கு விசாரணையில் பங்கேற்கும் டக்ளஸ் Reviewed by NEWMANNAR on October 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.