போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்.Photos.
7போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை(1) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதீப்புக்கள் குறித்தும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டது.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக நோய் தொடர்பாகவும்,அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தின் போது போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழு ஒன்றை நியமித்து கடமையில் ஈடுபடுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-குறித்த விசேட கூட்டத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,மன்னார் பொதுவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,பொது சுகாதார வைத்திய அதிகாரி,மது வரி திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள்,திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Admin
on
October 01, 2015
Rating:

No comments:
Post a Comment