இலங்கையில் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் கிலோகிராம் பால்மா உற்பத்தி செய்யப்படுகிறது : ஹரிசன் சபையில் தகவல்
இலங்கையில் பால்மா உற்பத்தியில் எந்தவிதமான வீழ்ச்சியும் இடம்பெற்றிருக்கவில்லை. இங்கு தற்போது நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் 14 ஆயிரம் கிலோ கிராம் பால்மா உற்பத்தி செய்யப்படுகிறது என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் இன்று சபையில் தகவல் வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்தரணவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹரிசன் மேலும் கூறுகையில், உள்ளூர் சந்தையில் ஹைலன்ட் பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஏனெனில் ஹைலன்ட் பால்மாவுக்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது. இதுவே இதற்கான காரணமாகும். எனினும் பால்மா உற்பத்தியில் எந்த வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் கிலோ கிராம் பால்மா உற்பத்தி செய்யப்படுகின்றது.
அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் பால்மா உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுவதால் அக்காலப்பகுதியில் பால்மா உற்பத்தியும் குறைவடையும்.
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் கிலோகிராம் பால்மா உற்பத்தி செய்யப்படுகிறது : ஹரிசன் சபையில் தகவல்
Reviewed by Author
on
November 06, 2015
Rating:

No comments:
Post a Comment