அண்மைய செய்திகள்

recent
-

2016 ஆம்ஆண்டுக்கானவரவுசெலவுத்திட்டம் - ஒரேபார்வையில்

2016ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம், நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில்நேற்று
முன்வைக்கப்பட்டது.


சிறுமுதலீட்டுநிறுவனங்களைதரப்படுத்துவதற்காகதரநிர்ணயசபைஒன்று உருவாக்கப்படும்என்றுஅவர்அறிவித்துள்ளார்.

இதன்படிஅனைத்துசிறுமுதலீட்டுநிறுவனங்களும், உத்தேசதரநிர்ணயசபையில் வருடாந்தகட்டணம் செலுத்தி பதிவுசெய்துக்கொள்ளவேண்டும்.

சிறியமற்றும்நடுத்தரஅளவானகைத்தொழிலைஅபிவிருத்திசெய்வதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.

உள்நாட்டில்உற்பத்திசெய்யப்படுகின்ற கீரிசம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும்,  நாடு 38 ரூபாவாகவும் கிலோஒன்றுக்கான உத்தரவாதவிலைஅறிவிக்கப்படும்.

தேசியபால்மா உற்பத்திக்கு 400 கிராமிற்கு 35 ரூபாஎன்றநிவாரணத்தொகைவழங்கப்படவுள்ளது.

இதன்படிஉள்நாட்டில்உற்பத்திசெய்யப்படும்பால்மாவின் 400 கிராமின்விலை 325ல்இருந்து, 290 ரூபாவாககுறைவடையுள்ளது.

தேயிலை ஏற்றுமதியின் போது சிலோன்ரீ என்றவர்த்தககுறிபயன்படுத்தப்படவேண்டியதுகட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்தேயிலை, தெங்குமற்றும்றப்பர் ஆராச்சிநிலையங்களைஅபிவிருத்தசெய்வதற்கானநிதிஒதுக்கங்களும்மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்தகாலங்களில்பாக்குஉற்பத்திகைவிடப்பட்டநிலையில்இருந்தது.

அதனைஅபிவிருத்திசெய்வதற்கானநடவடிக்கைஎடுக்கப்படும்.

அதேநேரம், மீன்பிடித்துறைசார்ந்தவர்களுக்கு 1 மில்லியன்ரூபாய்காப்புறுதிவழங்கப்படும்என்றும் 2016ம்ஆண்டுக்கானவரவுசெலவுத்திட்டத்தில்பிரேரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின்முக்கியபொருளாதார இலக்காக கிராமிய அபிவிருத்திகாணப்படும்.

கிராமியஅபிவிருத்தியைமேம்படுத்துவதற்காகஒவ்வொரு கிராமத்துக்கும் தலா 1500 மில்லியன்ரூபாய்கள்ஒதுக்கப்படும்.

வவுனியாவில்பொருளாதாரமத்தியநிலையம்ஒன்றுஉருவாக்கப்படும்.

காட்டுயானைகள்மக்கள்வாழ்கின்றபிரதேசங்களுக்குள்பிரவேசிப்பதால் ஏற்படுகின்றபிரச்சினைகளைதணித்துசூழல்பாதுகாப்பிற்கானஆக்கபூர்வமானநடவடிக்கைஎடுக்கப்படும்.

இதற்காக 4 ஆயிரம்மில்லியன்ஒதுக்கப்படும்.

சிலாபம், மிரிஸ்ஸ, கல்முனை, காரைநகர்மற்றும்பூர்னவெல்லதுறைமுகஅபிவிருத்திகளக்காக 750 மில்லியன்ரூபாய்ஒதுக்கப்படவுள்ளது.

ரின்மீனுக்காக 125 ரூபாசலுகைவிலைஅமுலாக்கப்படுவதுடன், இந்ததிட்டத்தைநடைமுறைப்படுத்துவதற்காகலக்சத்தொசவுக்கு 300 மில்லியன்ரூபாய்கள்ஒதுக்கப்படும்.

அடுத்தஆண்டுக்கானவரவுசெலவுத்திட்டத்தில் அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக மன்னாரிலும், ரத்தினபுரியிலும் களஞ்சிய வசதிகளைஏற்படுத்துவதற்காக 1000 மில்லியன்ரூபாய்ஒதுக்கப்படும்.

புதிய 50 தங்கஇறக்குமதிஅனுமதிப்பத்திரங்கள்வழங்கப்படவுள்ளன.

அத்துடன்இரத்தினக்கற்கள்மற்றும்ஆபரணசந்தைவிரிவாக்கலுக்காக 2 பில்லியன்டொலர்கள்ஒதுக்கப்படவுள்ளன.

இலங்கைக்குசொந்தமானபாரியஅளவானநிதிவெளிநாடுகளுக்குகொண்டு செல்லப்பட்டுள்ளன.

அவற்றைஉள்நாட்டுக்குகொண்டுவந்துஅபிவிருத்திக்காகபயன்படுத்தப்படும்.

இதேவேளை, பெருந்தோட்டங்களில் 10 வருடங்களுக்குமேல்குடியிருந்தவர்களுக்கு, அவர்களின்வீடுகள்சொந்தமாக்கப்படும்என்றும் 2016ம்ஆண்டுக்கானவரவுசெலவுத்திட்டத்தில்அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்குகாணிகளைகுத்தகைக்குவிடுவதற்கானவரி நீக்கப்படவுள்ளது.

சூரியஒளிசக்திபயன்பாடுஊக்குவிக்கப்படும்.

குடிசைகளில்வாழ்கின்றவர்களுக்காகஒருலட்சம்வீட்டுத்திட்டமுமும், நடுத்தரவருமானம்பெரும்குடும்பங்களுக்காகஒருலட்சத்து 50 ஆயிரம்வீட்டுத்திட்டமும், சிரேஷ்ட்டபொதுசேவைஅதிகாரிகளுக்காக 5 ஆயிரம்வீட்டுத்திட்டமும்அமுலாக்கப்படும்.

காணிகள்தொடர்பில்இலத்திரனியல்தகவல்படுத்துவதற்காக 500 மில்லியன்ரூபாய்ஒதுக்கப்படும்.

2016 ஜுன்மாதம்நிறைவடையும்போது, 10 பில்லியனாகவெளிநாட்டுஒதுக்கம்அதிகரிக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தஆண்டுமுதல்இயங்கும்வகையில், இறக்குமதிஏற்றுமதிவங்கிதொழிற்படவுள்ளதுடன், அதற்காக 50 மில்லியன்ரூபாஒதுக்கப்படவுள்ளது.

திருகோணமலைமற்றும்ஹாம்பாந்தொட்டைதுறைமுகங்கள்கப்பல்திருத்தல்மற்றும்கப்பல்;களுக்குஎண்ணெய்மற்றும்தண்ணீர்வழங்கும்நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளன.

தேசியஇலத்திரனியல்அடையாளப்படுத்தல்கள்அடுத்தவருடம்முதல் நாடுமுழுவதும்அமுலாக்கப்படும்.

வெளிநாட்டுநாணயவர்த்தகம்குறித்தபுதியசட்டங்கள்அமுலாக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், கட்டுமானத்துறையில், சுமார் 7 ஆயிரத்து 500 இளைஞர்களுக்கானதொழிற்சார்பயிற்சிகளுக்காக 500 மில்லியன்ஒதுக்கப்படும்.

கட்டுமானபொருட்களின்இறக்குமதிவரிகுறைக்கப்படும்.

வெளிநாட்டுகட்டுமானப்தொழிற்துறையினர்உள்நாட்டுகட்டுமானதுறையினருடன்இணைந்துபணியாற்றமுடியும்.

பாடசாலைகளின்சுகாதாரவசதிகளுக்காக 4 ஆயிரம்மில்லியன்ரூபாய்ஒதுக்கப்படும்.

பாடசாலைஆசிரியர்களுக்கானதங்குமிடம்உள்ளிட்டவசதிகளைவழங்குவதற்காக 2 ஆயிரம்மில்லியன்ரூபாய்கள்ஒதுக்கப்படும்.

பாடசாலைஆசிரியர்களுக்குதொடர்ச்சியானபயிற்சியளிப்புகள்வழங்கப்படும்என்பதோடு, குறிப்பாகவிஞ்ஞானம், கணிதம்மற்றும்ஆங்கிலபாடங்களுக்காகவிசேடபயிற்சிகள்வழங்கப்படும்.

தனியார்துறையினருக்கானகுறைந்தபட்சம்வேதனஅதிகரிப்பான 2500 ரூபாய், இந்தவருடம் 1500; ரூபாவும், அடுத்தவருடம் 1000 ரூபாவுமாகஇரண்டுகட்டங்களாகவழங்கப்படவுள்ளது.

தனியார்துறைபணியாளர்களுக்கானஐந்துவேலைநாட்கள்அடங்கியவாரம், கட்டாயமாககண்காணிக்கப்படும்.

அதேவேளை, கல்வித்துறைக்காக 90 ஆயிரம்மில்லியன்ஓதுக்கப்படவுள்ளது.

பாடசாலைகளில்சேர்கின்றமாணவர்களுக்குகுறைந்தபட்சம் 250 ரூபாஉடனானவங்கிக்கணக்குதொடக்கப்படவேண்டும்.

பலமானநிதிநிறுவகத்தைஏற்படுத்துவதற்காக, பலவங்கிகள்ஒன்றிணைக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகமாணவர்கள்மடிகணினிகளைகொள்வனவு செய்வதற்காகவட்டியில்லாகடன்கள்வழங்கப்படும்என்பதோடு, இதற்காக 300 மில்லியன்ரூபாய்கள்ஒதுக்கப்படவுள்ளன.

அனைத்துமாணவர்களும்கல்விப்பொதுத்தராதஉயர்தரத்தைநிறைவு செய்திருக்கவேண்டும்அல்லது, சாதாரணதரபரீட்சையின்பின்னர்தொழிற்சார்கற்கையைகற்றிருக்கவேண்டும்என்பதுகட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வகுப்பொன்றுக்கானமாணவர்களின்எண்ணிக்கை 35க்குமட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துபாடசாலைகளுக்குமானதகவல்தொழில்நுட்பம்மற்றும் வாசிகசாலைவசதிகளைவழங்குவதற்கான 15 ஆயிரம்மில்லியன்ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.

தோட்டப்பாடசலைகளின்அபிவிருத்திக்காக 250 மில்லியன்ரூபாய்ஒதுக்கப்படவுள்ளது.

புத்தகங்கள், சஞ்சிகைகள்உள்ளிட்டவற்றின்இறக்குமதிவரிரத்துசெய்யப்படவுள்ளது.

காவற்துறைநிலையங்கள் 428ல்இருந்து 600ஆகஅதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், யாழ்ப்பாணம், குருனாகலைமற்றும்அனுராதபுரவைத்தியசாலையில் அபிவிருத்திசெயயப்படவுள்ளதுடன், 2000 மில்லியன்ரூபாய்செலவில்மின்னேரியாவில்சிறுநீரகதொகுதிக்கானவிசேடவைத்தியசாலைநிர்மாணிக்கப்படவுள்ளது.

நல்லூர், கண்டிமற்றும்மாத்தளையில்புற்றுநோய்சிகிச்சைநிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

திகன, பதுளைமற்றும்புத்தளம்ஆகியபகுதிகளில்புதியவிமானநிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன.

மத்தளைவிமானநிலையில்சரக்குபரிமாற்றவிமானநிலையமாக மாற்றப்படவுள்ளது.

2016ம்ஆண்டாகும்போதுஇலங்கையின்மொத்ததுறைமுகங்களின்எண்ணிக்கை 20ஆகஅதிகரிக்கப்படும்.

2016ம்ஆண்டுக்கானவரவுசெலவுத்திட்டத்தின்படி, சமயல்எரிவாயுஉள்ளிட்டஅத்தியாவசியபொருட்களின்விலைகள்குறைக்கப்படவுள்ளன.

இதன்படிசமயல்எரிவாயுவின்விலை 150 ரூபாவால்குறைக்கப்படும்.

உருளைக்கிழக்குகிலோஒன்றின்விலை 75 – 85 ரூபாவாகும், பெரியவெங்காயத்தின்விலை 85 – 95 ரூபாகவும்குறைக்கப்படும்.

உள்நாட்டில்உற்பத்திசெய்யப்படுகின்ற 400 கிராம்பால்மாவின்விலை 295 ரூபாவாககாணப்படும்.

குழந்தைகளுக்காகஒருகிலோபால்மாவின்விலை 100 ரூபாவால்குறைக்கப்படும்.

ரின்மீனின்விலை 125 ரூபாவாககாணப்படும்.

நெத்தலிகிலோஒன்றுக்கானஅதியுச்சவிலை 410 ரூபாகவும், பருப்புகிலோஒன்றுக்கானஅதியுச்சவிலை 169 ரூபாவாகவும், கருவாடுகிலோஒன்றுக்கானஅதிகபட்சவிலைஆயிரத்து100 ரூபாவாகவும், கடலைகிலோஒன்றுக்கானஅதிகபட்சவிலை 169 ரூபாவகவும்காணப்படும்.

அதேநேரம்மண்ணெண்ணைலீற்றர்ஒன்றின்விலை 10 ரூபாவால்குறைக்கப்படவுள்ளது.

2016 ஆம்ஆண்டுக்கானவரவுசெலவுத்திட்டம் - ஒரேபார்வையில் Reviewed by NEWMANNAR on November 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.