மர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..!
விண்வெளியில் இருந்து இன்று விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் பூமியில் இருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் வரையிலான இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்கலம் ஒன்றின் பாகமான டப்ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்கையின் தென் கடற்பரப்பின் கடலோரத்திலிருந்து 62 மைல் தூரத்தில் விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நேரத்தில் எவ்வித பொருட்களும் விழவில்லை.
இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த மர்மபொருள் விழும் என தெரிவிக்கப்பட்டது. னினும் குறித்த மர்மபொருள் விழவில்லை.
இதேவேளை குறித்த மர்மபொருள் விழும் வளியில் பூமியிலிருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் தூரத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..!
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment