தமிழ்க் கைதிகளை அரசாங்கம் ஒருபோதும் விடுவிக்கவே கூடாது : அமைச்சர் சம்பிக்க...
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட விடுதலைப்புலி கைதிகளை யார் விடுவித்தாலும் அது பாரிய குற்றமாகும். எக்காரணத்தை கொண்டும் தமிழ்க் கைதிகளை அரசாங்கம் விடுவிக்கக் கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். புலிகளுக்காக ஆதரவுக் குரல் எழுப்பும் தமிழ் தலைமைகள் ஏன் கே.பி, ருத்ரகுமாரன், பிள்ளையான், கருணா விடயத்தில் அமைதி காக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழர் அரசியல் தரப்பினர் அதிக அக்கறை காட்டிவரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த யுத்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த அதேபோல் புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பலரை முன்னைய அரசாங்கம் கைது செய்தது. அதேபோல் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத குழுவில் போராடிய பல்லாயிரக்கணக்கிலான உறுப்பினர்கள் கடந்த காலத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் மூலம் விடுதலையும் செய்யப்பட்டுள்ள னர். அதேசந்தர்ப்பத்தில் புலிகளின் நேரடி தொடர்பில் இருந்த சிலரே இன்றும் தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்கள் தொடர்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. அவ்வாறான நிலையில் ஏதேனும் காரணங்களை காட்டி அவர்களை விடுவிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளை நான் சுட்டிக்காட்டவில்லை. குற்றம் இல்லாத அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. யுத்தத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ்க் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை நானும் வரவேற்கின்றேன். ஆனால் அப்பாவி தமிழ்க் கைதிகள் என்ற பெயரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைத்து தமிழ்க் கைதிகளை யும் விடுவிக்க முயற்சிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த விடயத்தில் புலிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை யார் மேற்கொண்டாலும் அது தவறான விடயமாகும்.
புலிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை எந்த அரசாங்கம் மேற்கொண்டாலும் அது பாரதூரமான குற்றமாகும். இந்த ஆட்சியில் நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் சட்ட திட்டங்களை மதிக்கவும், நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றவும் வேண்டிய கட்டாய தேவையுள்ளது.
அதேபோல் புலிகளை விடுவிக்கக்கோரி இன்று பலர் ஆதரவுக் குரல் எழுப்புகின்றனர். அவர்களை நிரபராதிகள் என்று விமர்சிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளினால் இன்று பலர் விடுவிக்கப்பட் டும் உள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் உள்ள கைதிகளின் விடு தலைக்காக செயற்படுவோர் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான கே.பி, பிள்ளை யான், கருணா போன்றோரைத் தண்டிக்க ஏன் வலியுறுத்த தவறுகின்றனர்? ஆகவே திட்டமிட்டு இவர்கள் செய்யும் செயற்பாடு களுக்கு அரசாங்கம் துணை போகக் கூடாது என்றார்
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் ஒருபோதும் விடுவிக்கவே கூடாது : அமைச்சர் சம்பிக்க...
Reviewed by Author
on
November 21, 2015
Rating:

No comments:
Post a Comment