புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது அநீதியானதல்ல: சரத் பொன்சேகா...

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது அநீதியானதல்ல என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்வதில் எவ்வித அநீதியும் கிடையாது.
போரின் இறுதிக் காலத்தில் பன்னிரண்டாயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டும் சரணடைந்துமிருந்தனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீள இணைக்கப்பட்டனர்.
நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது நியாயமானது.
சிலர் இந்த விடுதலையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது அநீதியானதல்ல: சரத் பொன்சேகா...
Reviewed by Author
on
November 14, 2015
Rating:
Reviewed by Author
on
November 14, 2015
Rating:

No comments:
Post a Comment