அண்மைய செய்திகள்

recent
-

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம்: 60 பேர் பலி, 100 பேர் பிணையக்கைதிகளாகினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் இயந்திர துப்பாக்கியால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stade de France விளையாட்டு அரங்கு அருகே 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 60 பொதுமக்களை பணையக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உணவு விடுதியில் 11 நபர்களும் இசைக்கச்சேரி நடைபெற்ற பகுதியில் 15 பேரும் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



இரண்டாம் இணைப்பு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்பொழுது பாரிஸ் நகரில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 அதிகரித்துள்ளதுடன், பணையக் கைதிகளாக 100 பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கு தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும், பொலிஸாரும், பயங்கரவாத எதிர்ப்புக்குழுவினரும் பாரிஸ் நகரினை முற்றுகையிட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.


தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம்: 60 பேர் பலி, 100 பேர் பிணையக்கைதிகளாகினர். Reviewed by NEWMANNAR on November 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.