புதிதாக இரண்டு கிராமங்களை கல்விக்காக உள்வாங்கும் துரையம்மா அன்பகம்-Photos
துரையம்மா அன்பகத்தின் இம்மாதத்திற்கான கூட்டத்தொடர் இன்று 01-11-2015 காலை 10-00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தை தலைவர் தலமைதாங்கினார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எம்.ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய வருடத்திற்கான கல்விக்கிராமாக தேவன் பிட்டி-கணேஸபுரம்-ஈச்சளவக்கை-சன்னார் ஆகிய நான்கு கிராமங்களில் இரண்டை துரையம்மா அன்பகத்தின் கல்விக்கான கிராமமாக தெரிவு செய்து ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 10 மாணவர்கள் வீதம் இரண்டு கிராமங்களில் இருந்தும் மாணவர்களை உள்வாங்கும் திட்டத்திற்கு துரையம்மா அன்பகத்தின் உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்…
துரையம்மா அன்பகத்தின் 8வது வருடப்பூர்த்தியை முன்னிட்டு மன்னாரில் கல்விச்சேவை செய்யும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வுக்கும் நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர் தலைவர் தனது உரையில் அமைப்பின் செயற்பாடுகளை விரிபுபடுத்தினார் செயலாளர் சென்றகூட்டறிக்கை வாசித்தார் உறுப்பினர்கள் புதுவருடத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை கலந்தாலோசித்தனர் சிறிய விருந்துபசாரத்தோடு நிறைவுற்றது.
புதிதாக இரண்டு கிராமங்களை கல்விக்காக உள்வாங்கும் துரையம்மா அன்பகம்-Photos
Reviewed by NEWMANNAR
on
November 02, 2015
Rating:

No comments:
Post a Comment