மன்னார் நாகதாழ்வு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஸ்ரீகுமரன் சாதனன் விரைகணித போட்டியில் தேசிய மட்டத்தில் 1 ஆம் இடம்-Photos.
27. 09. 2015 அன்று அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற 7 வயது தொடக்கம் 9 வயது மாணவர்களுக்கான விரைகணித போட்டியில் . மன்/ சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மாணவன் ஸ்ரீகுமரன் சாதனன் வயது 7 அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்றுள்ளார். 8 நிமிடங்களில் 150 வினாக்களுக்கு 142 வினாக்களுக்கு விடையளித்து அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இம்மாணவன் மன்னார் மாவட்டத்தில் உள்ள நாகதாழ்வு, திருக்கேதீஸ்வரம் எனும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவன் ஸ்ரீ.சாதனன் அவர்களை மன்னார் இணையமும் மனமாரவாழ்த்தி கௌரவிக்கின்றது.
மன்னார் நாகதாழ்வு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஸ்ரீகுமரன் சாதனன் விரைகணித போட்டியில் தேசிய மட்டத்தில் 1 ஆம் இடம்-Photos.
Reviewed by NEWMANNAR
on
November 02, 2015
Rating:

No comments:
Post a Comment