பூமியை ஒத்த புதிய கோள் கண்டுபிடிப்பு...
பூமியை ஒத்த அளவுடையதும் அதனை ஒத்த வளிமண்டலத்தைக் கொண்டிருக்கக் கூடியதுமான கற்பாறையாலான கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய மண்டலத்திலிருந்து 39 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள கிளியஸி 1132 என்றழைக்கப்படும் சிறிய நட்சத்திரமொன்றைச் சுற்றி வலம் வரும் இந்த ஜி.ஜெ.1132பி என்ற கோளானது எமது பூமியுடன் ஒப்பிடுகையில் 1.2 மடங்கு அளவுடையதாகும். அந்த வகையில் அந்தக் கோள் எமது பூலோகத்தை விடவும் 16 சதவீதம் பெரியதாகும். அதன் விட்டம் 9200 மைல்களாகும். அநதக் கோள் பாறைகளாலும் இரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 278 பாகை பரனைட்டுக்கும் 584 பாகை பரனைட்டுக்கும் இடைப்பட்ட வெப்பநிலை நிலவுகிறது.
பூமியை ஒத்த புதிய கோள் கண்டுபிடிப்பு...
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment