அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- சிவமோகன் எம்.பி


நாட்டில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சிவபிரகாசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் மக்கள் கடந்த அரசாங்கத்தை தேர்தலில் தோற்கடித்தனர்.

அவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். சாதாரண பொதுமகன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியும்.

பாரியளவில் ஆயுதங்கள் கொண்டு வருவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இவ்வாறான சம்பவங்களின் ஊடாக நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடக் கூடாது.

நீதிமன்றின் தீர்ப்பு உரிய நேரத்தில் உரிய விதத்தில் வழங்கப்பட வேண்டும். பலம் பொருந்திய நபர்கள் குற்றச் செயல்களிலிருந்து தப்பிக்க சந்தர்ப்பம் உண்டு.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- சிவமோகன் எம்.பி Reviewed by NEWMANNAR on November 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.