கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி!
யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குணரத்தினம் சஞ்சீவினி(15) என்ற பாடசாலை மாணவி காணாமல்போயுள்ளதாக பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருந்தனர்.
இந் நிலையில் குறித்த சிறுமி தொடர்பான, புகைப்படம் மற்றும் தகவல்களை இலங்கை முழுவதும் உள்ள பொலிஸாருக்கு கொடிகாமம் பொலிஸார் வழங்கிய நிலையில் நேற்றய தினம் குறித்த சிறுமி திருகோணமலை மாவட்டத்திலிருந்து அப்பகுதி பொலிஸாரினால் மீட்கபபட்டடு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளார்.
சிறுமியை திருகோணமலையை சேர்ந்த திருமணமான முஸ்லிம் நபர் ஒருவர் பேருந்தில் அழைத்துச் சென்று சிறுமியை மதம் மாற்றி திருமணம் செய்யவும் முயற்சித்த நிலையில் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த முஸ்லிம் நபர் சிறுமியை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படவுள்ளார்.
இதேவேளை மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி!
Reviewed by NEWMANNAR
on
November 05, 2015
Rating:

No comments:
Post a Comment