பாலியாறு பிரதான வீதியில் மண் குவியல்-வீதி செப்பனிடப்படாததினால் மக்கள் சிரமம்- Photos
மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 பிரதான வீதி பாலியாறு பகுதியில் வீதி செப்பனிடுவதற்காக நீண்ட நாட்களுக்கு முன்னர் வீதிக்கு அருகின் கொட்டப்பட்ட செம்மண் வீதியில் பரப்பாததன் காரணத்தினால் அவ்வீதியூடாக மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளர்.
குறித்த வீதி செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்(ஆர்.டீ.ஏ)நீண்ட நாட்களுக்கு முன் குறித்த வீதிக்கு அருகில் செம்மண் குவிக்கப்பட்டது.
மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்பட்ட போதும் பாலியாறு பகுதியில் பாலம் ஒன்று காணப்படுவதினால் சுமார் 30 மீற்றர் வரையிலான வீதி அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.
இதனால் மழைக்காலங்களில் குறித்த பாலத்தை மேவி வெள்ள நீர் பெருக்கெடுப்பதினால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பல தடவைகள் தடைப்பட்ட நிலையில் காணப்பட்டது.
தற்போது மழைக் காலம் என்பதினால் குறித்த பாலத்தின் மேல் வெள்ள நீர் மேவி பாய்ந்து கொண்டுள்ளதால் மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதீப்படைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வீதி திருத்த பணிக்காக கொட்டப்பட்ட மண் குவியல்களினால் குறித்த வீதியில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினை தொடர்பில் சம்பவ இடத்திற்கு வந்த பொறியியலாளர் ஒருவரிடம் கூறிய போது குறித்த பொறியியலாளர் அசமந்த போக்குடன் கதைத்து விட்டுச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த மண் குவியல்களை பரப்பி உடனடியாக வீதியை செப்பணிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியாறு பிரதான வீதியில் மண் குவியல்-வீதி செப்பனிடப்படாததினால் மக்கள் சிரமம்- Photos
Reviewed by NEWMANNAR
on
November 03, 2015
Rating:

No comments:
Post a Comment