சட்டத்தரணியும் மாகாண சபை உறுப்பினருமான சிராய்வா தலைமையில் பேசாலையில் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு!-Photos
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தேசியப்பட்டியல் மூலம் நியமனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினருக்கும் மன்னார், வடமாகாண சட்டத்தரணி சிராய்வா தலைமையில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்களால் இன்று மாபெரும் வரவேற்பு நடாத்தப்பட்டது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஐந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பேசாலை சமூகம் வரவேற்று வாழ்த்து தெரிவிக்கும் நோக்குடன் இன்று ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு விழா ஒன்றை மேற்கொண்டது.
இவ் நிகழ்வில் வடமாகாண சட்டத்தரணி சிராய்வா,வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் வருகை தந்ததையிட்டு இவர்களை பேசாலை ஆலய நாற்சந்தியிலிருந்து பத்திமா மகா வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் ஆலய மண்டபத்துக்கு ஊர் மக்களால் அழைத்து செல்லப்பட்டனர்.
பின் அங்கு பங்கு தந்தை அருட்பணி இ.செபமாலை அடிகளாரின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், நடைபெற்ற கூட்டத்தில் பேசாலை முருகன் கோவில் குருக்கள் சிவஸ்ரீ தர்மகுமாரக் குருக்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சட்டத்தரணியும் மாகாண சபை உறுப்பினருமான சிராய்வா தலைமையில் பேசாலையில் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு!-Photos
Reviewed by NEWMANNAR
on
November 08, 2015
Rating:
No comments:
Post a Comment