திருக்கேதீஸ்வரத்தில் தொல்பொருளுக்கு சேதம் விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!
மன்னார் மாவட்டம், திருக்கேதீஸ்வரம், பாலாவியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐந்து வருடங்களுக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டது.
திருக்கேதீஸ்வரம், பாலாவியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான காணி ஒன்றில் மீள்குடியேறுவதற்காக காணியை துப்பரவு செய்து கட்டுமான பணியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அவருக்கு எதிரான ஆதாரங்களும் சாட்சியங்களும் இல்லாத காரணத்தால் எதிரி விடுதலை செய்யப்பட்டார்.
2011ம் ஆண்டு மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கு கடந்த வெள்ளிக் கிழமை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே எதிர் தரப்பில் வாதடிய சட்டத்தரனிகளின் வாதங்களைத் தொடர்ந்தே இவ் வழக்கு ஐந்து வருடங்களுக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டது.
2011ம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் பாலாவியில் அப்பகுதி மக்கள் மீள்குடியேறிய போது அப்பகுதியைச் சேர்ந்த விக்கினராஐh கயிலைநாதன் என்பவரும் தனது குடும்பத்துடன் தாங்களும் தங்களது சொந்தமான காணியில் மீள்குடியேறுவதற்காக அவ் காணியை துப்பரவு செய்து சுற்று வேலி அடைத்து வீடு கட்டுமானத்துக்காக தூண்கள் அமைத்த வேளையில் இவ் நபருக்கு எதிராக தொல்பொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகள் மன்னார் பொலிசில் முறையீடு செய்து 27.09.2011ம் ஆண்டு இவருக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது இவ் நபரால் ஆக்கிரமிக்கப்படும் காணியானது தொல்பொருள் ஆய்வு திணைக்களத்துக்கு சொந்தமானதும் எனவும் அடுத்து இவ் சந்தேக நபர் தொல்பொருள்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஐந்து வருடங்களாக மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வந்த இவ் வழக்கு கடந்த வெள்ளிக் கிழமை (06) நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்ட போது எதிரி சார்பாக சட்டத்தரணிகள் இராஐகுலேந்திரன், எம்.எம்.சபூர்தீன், வீ.எஸ்.மகாலிங்கம், துசித் ஜோன்தாசன் பி.றெக்னோ ஆகியோர் ஆஐராகி தங்கள் வாதாட்டத்தில் வழக்கு தொடுனர் இவ் வழக்கு சம்பந்தமாக தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்கள் முன்னிலைப் படுத்தாததால் இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டதைத் தொடர்ந்து எதிரி விடுதலை செய்யப்பட்டார்
திருக்கேதீஸ்வரத்தில் தொல்பொருளுக்கு சேதம் விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!
Reviewed by NEWMANNAR
on
November 08, 2015
Rating:

No comments:
Post a Comment