அண்மைய செய்திகள்

recent
-

ஜப்பான் நாட்டின் தூதுவர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தார்


ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கெனின்சீ சுகனூமா தலமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றிருந்தது.

மேற்படி சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதன்போது பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் விவசாயம், மீன்பிடி தொடர்பான விடயங்கள் அதிகம் பேசப்பட்டிருந்தது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் களஞ்சியம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பேசியிருந்தார்.

இதன்போது எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணவேண்டும். என்ற நிலைப்பாடே காணப்படுகின்றது. என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். மேலும் விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் ஆய்வுகளை நடத்த கூடிய வகையில் பல்கலைக்கழகத்தில் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் பேசியிருந்தார்.



மேலும் வெளிநாட்டு அமைப்புக்கள் வடமாகாணத்தில் செய்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக எமக்கு எவ்விதமான தகவல்களும் தெரியப்படுத்தப்படுவதில்லை. என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்நிலையில் தமது ஜய்க்கா நிறுவனத்தின் பணிகள் தொடர்பாக எமக்கு அறிய தருவதாக கூறியிருக்கின்றார்.

தொடர்ந்ந்து நல்லிணக்கம் தொடர்பாக பேசியிருந்தார். இதன்போது நல்லிணக்கம் என்பது சின்ன சின்ன விடயங்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இங்கே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கூட அரசாங்கம் நல்லதொரு சமிக்ஞையினை காண்பிக்கவில்லை.

பின் எவ்வாறு ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்? என்பதை கேட்டிருந்தேன். மேலும் உள்ளக விசாரணை பொறிமுறை என்பது நன்மையளிக்கும் ஒரு விடயம் என கூறியிருந்தார்.

ஆனால் அவ்வாறு நான் நம்பவில்லை. என்பதை அவருக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றேன். மேலும் முன்னர் இடம்பெற்ற குற்ற ங்களுடன் தொடர்புடையவர்கள் கூட இன்னமும் தண்டிக்கப்படவில்லை. என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன் என்றார்.





ஜப்பான் நாட்டின் தூதுவர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தார் Reviewed by NEWMANNAR on November 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.