தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 35 பேரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களில் முதற்கட்டமாக 35 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கட்டம் கட்டமாக 41 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 41 இந்திய மீனவர்களில் 35 பேரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கடற்தொழில் திணைக்கள அதிகாரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த 35 மீனவர்களின் விடுதலை தொடர்பில் நாளை (9)திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கட்டளை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பக்கப்பட்டு குறித்த மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா மேலும் தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 35 பேரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி.
Reviewed by NEWMANNAR
on
November 08, 2015
Rating:

No comments:
Post a Comment