தென்கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக மன்னாரில் கழுதைமூலம் மனநலம் குன்றியவர்களுக்கான உளநலசிகிச்சை நிலையம்.-Photos
தென் கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக கழுதைமூலம் மனநலம் குன்றியவர்களுக்கான உளநலசிகிச்சை நிலையம் ஒன்றை இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் முருங்கனில் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட விசேடதேவை உடையோர் நிலையத்தில் (MARDAP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் கழுதைகள் பொதிசுமப்பதற்காக ஆராபியர்களினால்(Arabians)கொண்டுவரப்பட்டது. இவை மன்னார் டச்சுக் கோட்டை கட்டுவதற்காக திருக்கேதீஸ்வரத்திலிருந்து முருகைக்கற்கள், கழிமண், மரத்தளபாடங்கள் முட்டை,தேன்சாடிகள், போன்றவற்றை சுமந்துவந்து இக்கோட்டையைக் கட்டியதாக சரித்திரம் கூறுகின்றது.
பள்ளிமுனையிலிருந்து மன்னார்கோட்டையில் வசித்த பிரபுக்களுக்காக உணவு, குடிநீர், பெண் ஊழியர்களை,சுமந்துவந்ததாக சான்றுகள் பகர்கின்றன. ஓர் சமயம் சலவைத் தொழிலாளர்களின் செல்லப்பிராணியாக கருதப்பட்ட இக்கழுதைகள் பொதி,விறகுகள் சுமப்பதற்கு பாவிக்கப்பட்டதாகவும், இத்தொழிலாளர்களின் பெண்பிள்ளைகள் திருமணத்தின் போது ஓர் சில பசுமாடுகள், கோழிகள், கழுதைகள் இவர்களுக்கு சீதனமாக வழங்கப்பட்டதாக அறிப்படுகின்றது.
மன்னார் சாந்திபுரக் கிராமத்தில் வசிக்கும் மூத்தகுடியினர் தாம் இந்தியாவில் அகதிகளாக இருந்தபோது சிறு குழந்தைகளின் தோசம் கழிப்பதற்காக கழுதைப் பால் கறந்து கொடுத்ததாகவும், குழந்தைகளைத் தரையில் கிடத்திகழுதைகளைக் கடக்கச் செய்ததாகவும் நோய்வாயப்பட்டவர்கள் கழுதையை முத்தமிடுவதால் தோசம் நீங்கியதாகவும்அறிவித்துள்ளனர்.
உலகில் கழுதையின் பால் கட்டி (Cheese) அதிகூடியவிலையில் விற்கப்படுவதாக அறிப்படுகின்றது. தென்னந்தோட்டத்தில் தென்னைக் குருத்துகளைத் தாக்கும் கருவண்டு, செவ்வண்டு (Black & Red Beetle)போன்றவற்றைக் குறைப்பதற்கும், கோரைப்புற்கள், வேர்களை கழுதைகள் உண்டு அகற்றுவதினால் இவற்றை தென்னந் தோட்டத்தில்வளர்ப்பதாகவும் அறியப்படுகின்றது. மன்னார் ஆயர் இல்லத் தோட்டத்திலும், எருக்கலம்பிட்டி ,தாராபுரம்தென்னந் தோட்டங்களிலும் ஓர் சிலகழுதைகள் வளர்ப்பதை தற்போதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ பைபிளின்படி யேசுநாதர் பாஸ்கா காலத்திருவிழாவின் போது கழுதையின் மேல் அழைத்துவரப்பட்டதை நினைவுகூர்வதற்காக இன்றும் கிரேக்கதேசத்தில் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக சகல கழுதைகளின் உடம்பில் கழுத்தில் இருந்து முதுகு வரை சிலுவை அடையாளம் இருப்பதை அவதானிக்கலாம்.
மன்னாரில் நாளடைவில் 1950 இன் பின் றிச்சோவண்டி,(Rickshaw) மாட்டுவண்டி, குதிரைவண்டி,துவிச்சக்கரவண்டி போன்ற்ன அறிமுகப்படுத்தப்பட்டபோது கழுதைகள் மூலம் பொதி சுமப்பது நிறுத்தப்பட்டது.
1975ம் ஆண்டின் பின் அராபியரினால் கொண்டுவரப்பட்ட கழுதைகள் பராமரிப்போர் இன்றி கட்டாக்காலிகளாக நகரத்திலும், கிராமத்திலும் திரிந்து பாதசாரிகளுக்கும், வாகனங்களுக்கும், சுற்றாடலுக்கும,; இடையூறுவிளைவிக்கத் தொடங்கியது. இவற்றின் இனப்பொருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும்,20 ஆண்டுகளுக்கு முன் ஓர் சிலகழுதைகளை அரச செலவில் பெருநிலப்பரப்பிற்கு கொண்டுபோய்;விடப்பட்டது.
பின்பு கழுதைகள் ஓர் கேவலமான மிருகமாக கருதப்பட்டது. பாடசாலையில் படிக்காத பிள்ளைகளையும், வேலையற்ற ஊதாரியாகத்திரியும் இளைஞர்களையும் “நீ ஒரு கழுதையென பெற்ரோர்கள் பழித்துரைப்பார்கள்”
போரின் பின் 2010ம் ஆண்டளவில் “டயஸ்போரா “என அழைக்கப்படும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களைக் கொண்ட நிறுவனங்கள் அ;ம்பாந்தோட்டைக்கு அரசால் அழைக்கப்பட்டபோது சமூகமளித்திருந்தமன்னார் மாவட்ட வர்த்தகக்கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவரின் அழைப்பின் பேரில் “டயஸ்போரா அவுஸ்ரேலிய “ இயக்குனர் திரு. ஜெரமிலியனகே (கண்டியில் பிறந்த சிங்களவர் 4 வயதில்அவுஸ்ரேலியாவில் குடியேறியவர்) மன்னாரில் சேவையாற்றுவதற்காக வருகைதந்து மன்னார் நகர எல்லைக்குள் உள்ள கிராமியமட்ட சங்கங்களின் தலைவர்களுடனும், அரச, அரசசார்பற்ற அதிகாரிகளுடனும், மதப் பிரதிநிதிகளுடனும் உரையாடியதற்கமைய “பிறிச்சிங் லங்கா “ எனும் ஸ்தாபனத்தை 2013 ல் மன்னாரில் ஆரம்பித்தார்.
மன்னாரில் உள்ள கழுதைகள் இவரைக் கவர்ந்ததன் பேரில் உலகில் உள்ள கழுதைகள் சரணாலயம் ஐக்கியராட்சியம்,(Donkey Sanctuary U.K.) இந்தியா ,அவுஸ்ரேலியா, எத்தியோப்பியா
போன்றநாட்டு சங்கங்களுடன் தொடர்புகொண்டு கழுதைகளைப் பராமரிப்பதாற்கும் அவற்றின் மூலம் பலபிரயோசனங்களைப் பெறுவத்கும் பல அரியமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 2013ல் இருந்து 2015 வரை 7 தடவைகளுக்கு மேல் இந்தியா மிருகவைத்தியர் திரு.ரமேஸ்,ஐக்கியராட்சியத்திலிருந்து பலமிருகவைத்தியர்களும், சமூகசேவையாளர்களும், அவுஸ்ரேலியாவில் இருந்து பல சமூகநலன்விரும்பிகளும் மன்னாருக்கு விஜயம்செய்து ஒருசில கழுதைகளைப் பராமரித்துவருவதுடன் அவற்றுக்குநலமடிப்பதிலும் (Castration) உணவூட்டுவதிலும், காயங்களுக்கு சிகிச்சையளிப்பதிலும், குறிப்பாக கழுதைகள் மூலம் மனநலம் குன்றிய சிறார்களுக்கான உளநலசிகிச்சை அளிப்பதிலும் பாடசாலைசிறார்களுக்கு கழுதைகள் பற்றிய காருண்ணியத்தை வளர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் வெளிநாட்டுமிருகவைத்தியர்கள் பலர் விஜயம் செய்து மன்னார் மாவட்ட மிருகவைத்தியர்களுக்கும்,வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கும் சிகிச்சைசம்பந்தாக பலசெயல் விளக்கங்களை செய்துகாட்டியுள்ளனர்.அண்மையில் 10 அவுஸ்ரேலிய கழுதைகள் நல்னவிரும்பிகள் மன்னாருக்கு விஜயம் செய்து குறிப்பாகமன்னார் பட்டிணத்தில் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட விசேடதேவையுடைய பிள்ளைகளுக்கு (MARDAP) பல செயல்முறைவிளக்கங்களை விளக்கிக்காட்டினர். இதனால் 20 பயனாளிகளும், 15 பெற்ரோர்களும், 6 MARDAP ஊழியர்களும,; 7 பிறிச்சிங் லங்கா ஊழியர்களும் முழுமையாக ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எப்படி செல்லப் பிராணிகளான பூனை, நாய், ஆடு, மாடு, கிளி, அணில் போன்றவை மூலம் மனநலம் பாத்திக்கப்பட்டவர்களும் வயோதிபர்களும் தம்மை ஆற்றுப்படுத்துவதுபோல் கழுதைகள் மூலம் இவர்களுக்கு சிகிச்சையளிக்கமுடியும் என உலகசுகாதார ஸ்தாபனமும் (WuO), கழுதைகள் சரணாலயம் ஐக்கிய இராட்சியம்,( Donkey Sanctuary U.K ) இந்தியா ,பாக்கிஸ்தான், எத்தியோப்பியா,அவுஸ்ரேலியா போன்றன(Donkey Assisted Therapy - DAT) குறிப்பிட்டு சான்றுபகர்கின்றது .
கடந்தவருடம் கழுதைகள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட சிகிச்சையைப் பார்வையிடுவதற்காக MARDAP நிறுவனப்பணிப்பாளர் சங். சகோ. யோசப்பின் மேரி கழுதைகள் சரணாலாயம் ஐக்கியராட்சியத்திற்குச் சென்று, 1வாரம் தங்கி பயிற்சி பெற்று அச்சிகிச்சையை முருங்கனில் இயங்கும் MARDAP சிகிச்சைநிலையத்தில்வெகுவிரைவில் தொடங்க உள்ளார்.
இதற்காக MARDAP ,கழுதைகள் சரணாலயம் ஐக்கியராட்சியம், (MARDAP Donkey Sanctuary U.K.) பிற்ச்சிங் லங்கா (Bridging Lanka )போன்றன ஓர் உடன்படிக்கையை கைச்சாத்திட்டு 3 மில்லியன் ரூபாசெலவில் ஓர் கட்டிடம் ஒன்றை முருங்கனில் அமைப்பதற்கு 2014ல் குரு முதல்வர் வண. பிதா. விக்கரர் சோசையினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தற்போது கட்டிடவேலைகள்நடைபெற்றுவருவதுடன், கடந்த 6 மாதங்களாக நன்கு பழக்கப்பட்ட கழுதைகள், கழுத்துப் பட்டிஅணிந்து, குறியிடப்பட்டு, பெயர் சூட்டப்பட்டு MARDAP பயனாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் அவற்றைப்பாதுகாப்பாக கையாளுவதற்கும், பயனாளிகளின் மனநிலையை அறிந்து அவற்றின் மூலம் சிகிச்சையளிப்பதற்கும் நடவடிக்கை மன்னாரில் எடுக்கப்பட்டுவருகின்றன.இதற்குப் மன்னார்ப் பொதுமக்களினதும், நலன் விரும்பிகளினதும,; சமூக ஸ்தாபனங்களினதும் ஒத்துளைப்பபைMARDAP பயனாளிகளும், பிறிஜிச்சிங்லங்கா உத்தியோகத்தர்களும் மன்னார் கழுதைகள் சரணாலயமும்பெரிதும் எதிர்பார்த்து நிற்கின்றது.
“மீண்டும் மன்னார்க் கழுதைகளுக்கு நல்லதோர் எதிர்காலம் உண்டு”
தகவல்
திரு. சின்கிளேயர் பீற்றர்
பிற்ச்சிங் லங்கா மன்னார்.
தொ. பே. 077-2131-652
மின்அஞ்சல் petsinclair@gmail.com
தென்கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக மன்னாரில் கழுதைமூலம் மனநலம் குன்றியவர்களுக்கான உளநலசிகிச்சை நிலையம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 08, 2015
Rating:

No comments:
Post a Comment