மன்னார் மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வு.-Photos
மன்னார் மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது.
விசேட கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட தலைவர்கள் எல பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் நகர சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ஆகிய ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயப்பட்டதோடு எல்லை நிர்ணயங்களின் போது உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:

No comments:
Post a Comment