‘குடு’ வியாபாரிகள் அரசியல் கைதிகளா? மைத்திரியின் குட்டை உடைக்கும் ‘சிங்கள அரசியல் கைதிகளின்’ விவரம்
இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைச்சாலைகளுக்குள்ளே முன்னெடுத்துவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நாடு முழுக்கவும் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவு போராட்டங்களைத் தொடர்ந்து முப்பத்து இரண்டு (32) அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே.
அரசால் வெளியிடப்பட்டுள்ள குறித்த முப்பத்து இரண்டு கைதிகளின் பெயர் பட்டியலில் உண்மையான சிங்கள அரசியல் கைதிகளின் பெயர் விவரங்களை உள்ளடக்காமல், குடு, கஞ்சா, போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு சிறைவாசம் அநுபவித்துவரும் ஆறு பாதாள உலக கோஸ்டியினரின் பெயர் விவரங்களை உள்ளீர்த்து, அந்த அறுவரையும் விடுதலை செய்ய மைத்திரி – ரணில் கூட்டரசு முயன்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதோ… இவர்களே உண்மையான சிங்கள அரசியல் கைதிகள்!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனும் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் சிறைவாசம் அநுபவித்துவரும் சிங்கள அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் வருமாறு:
மகஸின் சிறைச்சாலை
01. யூட் சுரேஸ் அஜித் எதிரசிங்க
02. பந்துல கஜதீர
03. குணரட்ண
04. றஞ்சித் பெரேரா
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை (மகஸின்)
05. டிறோன் பெர்னாண்டோ
06. லக்ஸ்மன் குறே (எஸ்.எஸ்.பி)
கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலை (பெண்கள் பிரிவு)
07. திருமதி கஜதீர (67 வயது)
கண்டி போஹம்பர சிறைச்சாலை
08. விக்ரமசிங்க
யாழ்ப்பாணம் சிறைச்சாலை
09. இந்திகா சஞ்சீவ
அநுராதபுரம் சிறைச்சாலை
10. கொப்பேகடுவ
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை
11. சூரியராய்ச்சி செல்டன்
‘குடு’ வியாபாரிகள் அரசியல் கைதிகளா? மைத்திரியின் குட்டை உடைக்கும் ‘சிங்கள அரசியல் கைதிகளின்’ விவரம்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:


No comments:
Post a Comment