மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று வரும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்-இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு.-Photos
மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.
-மாவட்டத்தில் ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவுள்ள நிலையில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 3867 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இருந்து 12 பேர் வேட்பாளர்களாக போடியிடுகின்றனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 5 பேரூம்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 பேரூம்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1 வேட்பாளரும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் ஒரு வேட்பாளரும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 பேரூம் தற்போது இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் வேட்பாளர்களாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 1113 பேரும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1023 பேரூம்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 424 பேரூம்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 802 பேரூம்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 505 பேரூம் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.
தற்போது இளைஞர் பாராணுளுமன்ற தேர்தல் மன்னார் வாவட்டத்தில் மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி அகிய 5 பிரதேசச் செயலகங்களில் இடம் பெற்று வருகின்றது.
-இளைஞர் யுவதிகள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது.தேர்தல் கண்கானிப்புக்குழுக்கள் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலை 3 மணியுடன் வாக்களிப்புக்கள் நிறைவடையும்.பின் பிரதேசச் செயலகங்களில் வாக்குகள் என்னப்பட்டு மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் வெற்றி பெற்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அறிவிக்கப்படுவார் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று வரும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்-இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 07, 2015
Rating:
No comments:
Post a Comment