இரண்டு புள்ளிகளால் வெற்றியை தவறவிட்ட மாணவி-Photos
புலமைப்பரீட்சையில் கோவிற்குளம் அ.த.க.பாடசாலை மாணவர்கள்..

நடந்து முடிந்த தரம் 5 புலைமைப்பரீட்சையில் மன்னார் கோவிற்குளம் அ.த.க.பாடசாலை இருந்து பங்கு பற்றிய 04 மாணவர்களின் இருந்து 03 மாணவர்களின் அடைவு நிலை
யோகானந்தன் சாருஜா- 150
அ.ஜெனிபர் அபிநயா- 118
யோகராசா சுஜாந்தினிக்கா- 79
மன்னார் மாவட்டத்திற்கான புலமைப்பரீட்சை வெட்டுப்பள்ளியானது 152 என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு செய்திருந்தபோதும்
கோவிற்குளம் அ.த.க.பாடசாலையில் இருந்து பரீட்சையில் கலந்து கொண்ட 04 மாணவர்களில் யோகானந்தன் சாருஜா- 150 புள்ளிகளை பெற்றிருந்த போதும் 02 புள்ளிகளால் வெற்றியை தவற விட்டிருந்தார்.
மன்னார் தேசிய பாடசாலைகளில் பங்கு பற்றி மாணவர்களோடு…. ஒப்பிடுகையில் மாபெரும் வெற்றிதான் ஏனெனில் எந்த வித வளங்களும் வசதிகளும் இல்லாமல் சுயமுயற்சியாலும் ச.சந்திரகாசன் ஆசிரியர் அவர்களின் பயிற்சியாலும் இந்தப்புள்ளியை பெற்றிருப்பது பாராட்டுக்குரியதுதான்.
பாடசாலைச்சமூகம் இன்னும் மிகக் கவனம் ஏடுத்தால் இனிவருங்காலம் பங்கு பற்றுகின்ற மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் சித்தியடைவார்கள் என்பது திண்ணம்.
இவ்மாணவர்களை மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது…
இரண்டு புள்ளிகளால் வெற்றியை தவறவிட்ட மாணவி-Photos
Reviewed by Author
on
November 07, 2015
Rating:

No comments:
Post a Comment