சம்பந்தனின் தோளில் தட்டிய மஹிந்த....
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் போது முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ மாலை 4.55 மணியளவில் சபைக்கு வந்தார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு – செலவு திட்டத்தை 2.00 மணிக்கு ஆரம்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் கழிந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சபைக்கு சமுகமளித்தார்.
முன்னைய ஆட்சியில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வரவு செலவு திட்டத்தை சபையில் முன்வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்த சபையின் முன் வரிசையில் பவித்ரா வன்னியாராச்சி எம்.பி. மட்டும் அமர்ந்திருந்தார். இதன்போது பவித்ரா வன்னியாராச்சி எம்.பி மற்றும் தினேஷ் குணவர்தன எம்.பி.யும் முன்னாள் ஜனாதிபதியிடம் உரையாடினர்.
கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் உரையில் நிதி அமைச்சர் குறிப்பிடுகையில் எதிர்கட்சியினர் கேள்விகளை எழுப்பினர்.இதன் போது நிதியமைச்சர் "உங்கள் ஆட்சியில் செய்யாததை நாம் செய்கிறோம்" என்றார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜோன் அமரதுங்கவும், லக்ஷ்மன் கிரியெல்லவும் முன்வரிசையில் இருந்தவாறு புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். முன்னாள் ஜனாதிபதியும் கையை அசைத்து எதையோ தெரிவித்தார்.
மாலை 5.25 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். இவ்வாறு வெ ளியேறும் போது தனது அருகாமை ஆசனத்தில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் தோலில் லேசாகத் தட்டிவிட்டு வெளியேறினார்.
இதன் போது எதிர்தரப்பில் சிலர் எழுந்து நின்று முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவிம் செலுத்தினர்.
சம்பந்தனின் தோளில் தட்டிய மஹிந்த....
 Reviewed by Author
        on 
        
November 21, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 21, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 21, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 21, 2015
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment