நடுவானில் 160 பயணிகளை காப்பாற்றிய விமானி!
நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினை சரியாக உணர்ந்து புத்தி சாதுர்யத்துடன் செயற்பட்டு விமானி ஒருவர் 160 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 7.15 மணிக்கு லக்னோ செல்லும் ஏர் இந்தியா விமானம் (AI 411) புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, வின்ட்ஷீல்ட் எனப்படும் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் இருப்பதை அதன் விமானி கவனித்தார், விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியதைக் கண்டு பதற்றமடைந்த அவர், உடனடியாக விமானத்தை திருப்ப முடிவு செய்தார்.
திடீரென விமானம் திருப்பப்பட்டதால் பயணிகளும் பரபரப்படைந்தனர். விமானியின் துரிதமான நடவடிக்கையால் 8.20 மணிக்கு இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் பயனித்த 160 பயணிகளும் வேறு விமானத்தின் மூலமாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். கண்ணாடியில் இருந்த விரிசல் சரி செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் தனது சேவையை தொடங்கியது.
நடுவானில் 160 பயணிகளை காப்பாற்றிய விமானி!
Reviewed by Author
on
December 21, 2015
Rating:

No comments:
Post a Comment