24 மணிநேர விமான பொலிஸ் சேவையை ஆரம்பித்துள்ள சுவிஸ்...
சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டத்திற்கமைய 24 மணிநேர விமான பொலிஸ் சேவையை 30 மில்லியன் ($29 மில்லியன்) ரூபா செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இதற்காக முக்கிய விமான தளங்களில் ஒன்றான வோட் பியேமி என்ற விமான தளத்திலேயே இத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பில், விமான பொலிஸ் சேவை இரண்டு முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதாவது, தீவிரமான போக்குவரத்து சட்டங்கள் அல்லது சுவிஸ் வான்வெளி இறையாண்மையை மீறும் வகையில் ஏனைய விமானம் தலையிடுவதற்கு தடைவிதித்தல், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் கவனமாக கண்காணிக்கவும் இராஜதந்திரம் ஒழிக்கப்படவும் வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இத்திட்டம் 2016ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதலில் இரண்டு விமானங்கள் செயற்படத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06:00 மணிமுதல் மாலை 08:00 மணிவரை இடம்பெறும்.
இதன்மூலம் இவை ஆண்டுக்கு 50 வாரங்கள் செயற்படும். மேலும் 2017ஆம் ஆண்டளவில் இது நாளாந்த சேவையாக மாற்றப்படும் . இத்திட்டம் 2019ஆம் ஆண்டளவில் வெற்றியடையம் பட்சத்தில் காலை 06.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இடம்பெறவும் திடடமிடப்பட்டுள்ளது.
இறுதியாக, 2020இல், இத்திட்டமானது காற்று ரோந்து வருவதிலும் சேவை 24 மணித்தியாலங்களாக, வாரம், வருடம் முழுவதும் சேவையில் இருக்கக்ககூடியதாக அமையும்.
24 மணிநேர விமான பொலிஸ் சேவையை ஆரம்பித்துள்ள சுவிஸ்...
Reviewed by Author
on
December 03, 2015
Rating:

No comments:
Post a Comment