ஆண்டின் சிறந்த விளையாட்டு நட்சத்திரத்திற்கான விருதை வென்ற செரீனா...
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு நட்சத்திரத்திற்கான விருதை வென்றுள்ளார்.
இந்த வருடம் அசைக்க முடியாத வெற்றிகளை பெற்ற செரீனா, ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (Sports Illustrated) இந்த வருடத்திற்கான சிறந்த விளையாட்டு நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார்.
32 ஆண்டுகளுக்கு பிறகு வீராங்கனை ஒருவர் ஆண்டின் சிறந்த நட்சத்திரத்திற்கான விருதை பெறுவது இதுவே முதன்முறையாகும். கடைசியாக 1983ஆம் ஆண்டு மேரி டெக்கர் இந்த விருதை பெற்றிருந்தார்.
இந்த வருடத்தில் செரீனா, தான் சந்தித்த 56 போட்டிகளில் 53இல் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்த வருடம் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவுஸ்திரேலியா, பிரெஞ்ச் மற்றும் விம்பிள்டன் ஆகியவற்றில் கிராண் ட்ஸ்லாம் கிண்ணத்தை கைப்பற்றினார்.
தற்போது 34 வயதானாலும் தன்னுடைய தனித்திறமையால் டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.
ஆண்டின் சிறந்த விளையாட்டு நட்சத்திரத்திற்கான விருதை வென்ற செரீனா...
Reviewed by Author
on
December 16, 2015
Rating:

No comments:
Post a Comment